உலகம் செய்தி

ஹோர்முஸ் இடையூறு தொடர்ந்தால் வாரந்தோறும் 10 கோடி பீப்பாய் எண்ணெய் இழப்பு ஏற்படும் என எச்சரிக்கை

  • May 11, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையில் இடையூறுகள் தொடர்ந்தால் உலக எண்ணெய் சந்தையில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என சவூதி அரேபியாவின் Saudi Aramco தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தெரிவித்துள்ளார். நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து குறைந்ததால், ஒவ்வொரு வாரமும் சுமார் 10 கோடி பீப்பாய் எண்ணெய் சந்தையிலிருந்து இழக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த நிலை மேலும் சில வாரங்கள் நீடித்தால், அடுத்த ஆண்டுவரை எண்ணெய் விநியோகம் இயல்பு நிலைக்கு திரும்பாது என்றும் அவர் […]

உலகம்

மெக்சிகோ எல்லையில் 06 சடலங்கள் மீட்பு!

  • May 11, 2026
  • 0 Comments

டெக்சாஸின் லாரெடோவில் (Laredo) ரயில் பெட்டியொன்றில் இருந்து 06 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மெக்சிகோ எல்லைக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர ரயில் யார்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இந்த உடல்களை  கண்டறிந்தார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், காவல்துறையினரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்தில் இருந்து சடலங்களை கைப்பற்றி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவர்களின் பூர்வீகம் வெளியிடப்படவில்லை. அதேநேரம் அமெரிக்க-மெக்சிகோ எல்லைக்கு அருகில் இதேபோன்ற சூழ்நிலைகளில் புலம்பெயர்ந்தோர் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

ஐரோப்பா செய்தி

ஸடார்மருக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் – கேத்தரின்

  • May 11, 2026
  • 0 Comments

தொழிலாளர் கட்சிக்குள் தலைமை மாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் Catherine பிரதமர் Starmerக்கு எதிராக தலைமைப் போட்டியைத் தொடங்கத் தயார் என தெரிவித்துள்ளார். அமைச்சரவை அமைச்சர் ஸ்டார்மருக்கு எதிராக நேரடியாக போட்டியிட முன்வராவிட்டால், தானே தலைமைப் போட்டிக்கான பெயரை முன்வைப்பேன் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். ஆனால் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை சற்று மாற்றி, இன்று பிரதமரின் உரையின் பின்னர் திருப்தி இல்லையெனில் நாடாளுமன்ற தொழிலாளர் கட்சிக்கு என் பெயரை […]

இலங்கை செய்தி

மஹிந்த நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

  • May 11, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை (12) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமேஜ் தெரிவித்துள்ளார். இதன்படி, நாளை காலை 9.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவர் கூறியுள்ளார். இருப்பினும், சில சட்ட ரீதியான விடயங்கள் குறித்து கலந்துரையாட வேண்டியுள்ளதால், இன்று மாலை சட்டத்தரணிகள் குழுவொன்றுடன் இது தொடர்பில் ஆலோசிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி, மறைந்த கபில சந்திரசேன […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புத்தகம் வழங்கிய சீமான்!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார். சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் […]

இலங்கை செய்தி

மீண்டும் வந்தாள் ‘யாழ் தேவி’!

  • May 11, 2026
  • 0 Comments

காலநிலை அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையிலான ‘யாழ். தேவி’ ரயில் சேவை, நான்கு மாத இடைவேளைக்குப் பின்னர் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 6.40 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட யாழ். தேவி ரயில், பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்தச் சேவை ஆரம்பமானதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ரயிலில் பயணிப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. யாழ். […]

இலங்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : மஞ்சள் எச்சரிக்கை!

  • May 11, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் நிலவிய வளிமண்டலக் கோளாறு, ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளது என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்தப் பகுதி தற்போது 10.1° வடக்கு மற்றும் 82.5° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் அமைந்துள்ளது என்றும், எனவே மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எச்சரித்துள்ளதுடன், மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாட்டைச் சுற்றியுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற […]

இந்தியா

தமிழக முதல்வர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு!!

  • May 11, 2026
  • 0 Comments

தமிழக முதமைச்சர் விஜய்க்கு Z+ பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவருக்கு  Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (11) முதல் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த Z+ பாதுகாப்பு படைப் பிரிவில் 55 மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் 24 மணிநேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றம் 24 மணிநேரமும் கடும் பாதுகாப்பு  வழங்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் – 32 தொழிற்கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகக் கோரிக்கை

  • May 11, 2026
  • 0 Comments

உள்ளாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு தேர்தல்களில் கட்சி சந்தித்த கடும் தோல்வியைத் தொடர்ந்து, பிரதமர் பதவி விலக வேண்டும் என தற்போது தொழிற்கட்சியின் 403 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 32 பேர் வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் Catherine West, பிரதமரின் புதிய உரை பலனளிக்கவில்லை என்றால் அவரது தலைமையைக் கேள்விக்குட்படுத்துவேன் என எச்சரித்துள்ளார். இதனிடையே படிப்படியான மாற்றங்கள் போதாது என ஒப்புக்கொண்டுள்ள ஸ்டார்மர், நாட்டின் பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கான  புதிய திட்டங்களை விரைவில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: ஸ்டாலினை சந்தித்தார் விஜய்!

  • May 11, 2026
  • 0 Comments

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினை, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டை இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். முன்னாள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜோசப் விஜய் முதலில் பொன்னாடை போர்த்தி, வாழ்த்து பெற்றார். பதிலுக்கு ஸ்டாலினும் ஜோசப் விஜய்க்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதி ஸ்டாலின் ஜோசப் விஜய்க்கு புத்தகம் வழங்கினார். இதனையடுத்து முதல்வர் ஜோசப் […]