பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் நாளை பலப்பரீட்சை
ஐபிஎல் 2026 தொடரின் 55 ஆவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் நாளை மோதுகின்றன.
இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலா மைதானத்தில் இரவு 7. 30 க்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ச்சியான தோல்விகளால் பின்னடைவைச் சந்தித்துள்ள பஞ்சாப் அணிக்கு, இந்தப் போட்டி பெரும் சவாலாக அமைந்துள்ளது.
மறுபுறம், புள்ளிப் பட்டியலில் பின்தங்கியுள்ள அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கெபிடல்ஸ்அணியில் இன்று சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





