செய்தி

முதல்வராகிறார் விஜய்: தமிழக அமைச்சரவையும் பதவியேற்பு!

  • May 10, 2026
  • 0 Comments

தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கவுள்ளார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை கைப்பற்;றியது. எனினும், விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கின. அந்தவகையில் தவெக ஆட்சிக்கு 120 சட்;டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிட்டியுள்ளது. அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164-ன் கீழ் விஜய்யை முதல்வராக நியமனம் செய்து அதற்கான ஆணையை ஆளுநர் அர்லேகர் நேற்று […]

ஐரோப்பா செய்தி

தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து ஸ்டார்மருக்கு எச்சரிக்கை விடுத்த தொழிலாளர் கட்சி எம்.பி. வெஸ்ட்

  • May 9, 2026
  • 0 Comments

வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் வெஸ்ட், பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிரேட்டர் லண்டனில் உள்ள ஹார்ன்சே மற்றும் ஃபிரையர்ன் பார்னெட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் வெஸ்ட், முதன்முதலில் 2015ஆம் ஆண்டு ஹார்ன்சே மற்றும் வுட் கிரீன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தற்போது கருவூலக் குழுவில் உறுப்பினராகவும், பாகிஸ்தானுக்கான வர்த்தகத் தூதராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னாள் தொழிலாளர் கட்சித் தலைவர் […]

செய்தி தமிழ்நாடு

புதிய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும்  வாழ்த்து

  • May 9, 2026
  • 0 Comments

திமுக தலைவர் ஸ்டாலின் புதிய அரசுக்கு மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக முதல்வராக விஜய் நாளை பதவியேற்கிறார்

  • May 9, 2026
  • 0 Comments

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று  மாலை சந்தித்ததையடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது உறுதியானது. அத்துடன் நாளை மாலை 3.15 க்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளமையும் உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் […]

இந்தியா

கடல்சார் பாதுகாப்பு திறனில் முக்கிய மாற்றம் – இலக்கை அடைந்த இந்தியா!

  • May 9, 2026
  • 0 Comments

குறுகிய தூரம் செல்லக்கூடிய கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்தியக் கடற்படையும் அதன் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (DRDO) இணைந்து ஒடிசா கடற்கரைக்கு அப்பால் வங்காள விரிகுடாவில் இந்தச் சோதனையை நடத்தியுள்ளன. குறுகிய தூரம் செல்லக்கூடிய இந்த ஏவுகணை (NASM-SR) ஒரு ஹெலிகாப்டரிலிருந்து வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டதாக  இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, இந்த […]

உலகம் செய்தி

அச்சுறுத்தலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் – ஈரான் அறிவிப்பு

  • May 9, 2026
  • 0 Comments

அமெரிக்கா தனது “அச்சுறுத்தும் அணுகுமுறை” மற்றும் “விரிவாக்கப் போக்கை” மாற்றினால், ராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, தெரிவித்துள்ளார். துருக்கி, கட்டார், சவூதி அரேபியா, எகிப்து, ஈராக் மற்றும் அசர்பைஜான் வெளியுறவு அமைச்சர்களுடன் நடந்த தொலைபேசி உரையாடல்களில் அவர் இதை கூறியதாக அவரது அதிகாரப்பூர்வ டெலிகிராம் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அமெரிக்கா தனது தற்போதைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும், இல்லையெனில் அச்சுறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் […]

ஐரோப்பா

ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 22 பிரித்தானியர் நாடு திரும்ப ஏற்பாடு!

  • May 9, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் உள்ள 22 பிரித்தானியர் நாளைய தினம் மீளவும் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளனர். கப்பலில் இருந்து இறங்கியவுடன் அவர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டப்பின் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் மருத்துவ நிபுணர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் இருப்பினும் உடனடி சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு வந்தவுடன், அந்த நபர்கள் 45 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கான குறிப்பிட்ட விவரங்கள் […]

இலங்கை

ஏர்பஸ் கொள்வனவு ஊழல் : மஹிந்தவுக்கு அழைப்பாணை!

  • May 9, 2026
  • 0 Comments

2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஏர்பஸ் ஏ-330 விமானங்களையும் எட்டு ஏ-350 விமானங்களையும் வாங்கியபோது, ​​அப்போதைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவும் அவரது மனைவி நியோமாலி விஜேநாயக்கவும் 2 மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.  தற்போது கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்க்ஷவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு […]

ஐரோப்பா செய்தி

நேட்டோவை வலுப்படுத்த ஐரோப்பா விருப்பம் – ஜெர்மன் ஜனாதிபதி கருத்து

  • May 9, 2026
  • 0 Comments

ஈரான் தொடர்பான போர் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ள நிலையில், நேட்டோ கூட்டணியை தொடர்ந்து செயல்பட வைக்க ஐரோப்பா உறுதியாக விரும்புகிறது என்று ஜெர்மன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஃபிரிட்ரிக் மெர்ஸ், ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் உடன் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில் இந்த கருத்தை தெரிவித்தார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு ஜெர்மனியும் சில ஐரோப்பிய நாடுகளும் ஆதரவு அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து, பதற்றம் அதிகரித்துள்ளதாக அவர் […]

இலங்கை

மின் கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் (PUCSL) ஆணைக்குழு இன்று  அறிவித்துள்ளது. நாளை நள்ளிரவு முதல் விலை உயர்வு  அமுலுக்கு வரவுள்ளது. குறிப்பாக, மாதந்தோறும் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோரை இலக்காகக் கொண்டு இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 180 அலகுகளுக்கும் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டு உபயோகப் பயனர்களுக்கு விலை திருத்தம் எதுவும் இருக்காது என்றும், இதன்மூலம் பெரும்பாலான குடும்பங்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருப்பதை […]