ஐரோப்பா

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் – செல்வாக்கை நிலைநாட்ட முயலும் மக்ரோன்!

பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் கிழக்கு ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தைத் நேற்று தொடங்கியுள்ளார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் தனது செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில், அவரது இந்த சுற்றுப்பயணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மக்ரோன் இந்த பயணத்தின்போது கென்யா மற்றும் எத்தியோப்பியாவிற்கு செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஒரு உச்சிமாநாட்டை நடத்தவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உச்சிமாநாடு ஆப்பிரிக்கத் தலைவர்களையும் வணிக நிர்வாகிகளையும் ஒன்றிணைக்கும் அதேவேளை பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை மேம்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன்  இந்தப் பயணத்தின் போது பிரான்ஸ் மற்றும் கென்ய நிறுவனங்களுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்ரோன் தனது சுற்றுப்பயணத்தை புதன்கிழமை அடிஸ் அபாபாவில் நிறைவு செய்வார். அங்கு அவர் எத்தியோப்பிய அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்துவதோடு, ஆப்பிரிக்காவில் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த ஆப்பிரிக்க ஒன்றியத் தலைமையகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளிலும் பங்கேற்பார்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!