ஐரோப்பா செய்தி

டவுனிங் தெருவில் இன்னும் ஒரு தசாப்த காலம் பணியாற்ற விரும்புகிறேன் – ஸ்டார்மர்

  • May 10, 2026
  • 0 Comments

டவுனிங் தெருவில் இன்னும் ஒரு தசாப்த காலம் பணியாற்ற விரும்புவதாக பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். பதவி விலக வேண்டும் என்ற அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையிலும், அடுத்த பொதுத் தேர்தலிலும் தொழிற்கட்சியைத் தானே வழிநடத்துவேன் என்று அவர் உறுதியாகக் கூறினார். ‘தி சண்டே மிரர்’ மற்றும் ‘தி அப்சர்வர்’ பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டிகளில், “இதுவொரு 10 ஆண்டு தேசிய மறுமலர்ச்சித் திட்டம்” என ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்திடமிருந்து மோசமான நிலைமையிலான பொருளாதாரத்தையும் சீர்குலைந்த […]

ஐரோப்பா செய்தி

லண்டனில் யூத எதிர்ப்பு கண்டன பேரணி – அரசியல் தலைவர்கள், மத அமைப்புகளுக்கு அழைப்பு

  • May 10, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பை கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் பல மத அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மத்திய லண்டனில் இன்று இந்த பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “யூத எதிர்ப்பை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பேரணிக்கு 30 இற்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன. இந்த பேரணியில் பிரதமர் ஸ்டார்மர் கலந்துகொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படேனொக் (kemi Badenoch) […]

உலகம்

அமெரிக்காவின் முன்மொழிவுக்கு பதிலளித்தது ஈரான்!

  • May 10, 2026
  • 0 Comments

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுக்கு ஈரான் தனது பதிலை அனுப்பியுள்ளது என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பதில் இன்று   பாகிஸ்தானிய மத்தியஸ்தர் மூலம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினம் ஈரான் வழங்கிய பதில் குறித்து விவரமாக தெரிவிக்கப்படவில்லை. அதேநேரம் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி (Mojtaba Khamenei), ஒரு மூத்த இராணுவத் தளபதியைச் சந்தித்துள்ளார். கடந்த சில நாட்களில் கமெனி நேரில் சந்தித்த இரண்டாவது சந்திப்பு இதுவாகும் என ஈரானிய அரசு […]

ஐரோப்பா

ஹன்டா வைரஸ் பரவல் – எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகள் வெளியேற்றம்!

  • May 10, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவல் குறித்து உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ள எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து பயணிகளை வெளியேற்றும் பணி இன்று (10) தொடங்கியது. அந்த சொகுசுக் கப்பல் தற்போது ஸ்பெயினின் கேனரி தீவுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வெளியேற்றம் குறித்து சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா வெளியிட்ட அறிக்கையில், பயணிகளை வெளியேற்றும் பணி  சாதாரணமாக நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், கப்பலில் உள்ள பயணிகள் யாருக்கும் எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 23 நாடுகளைச் சேர்ந்த […]

இந்தியா செய்தி

விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து   

  • May 10, 2026
  • 0 Comments

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழக அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும் எனவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் விஜய், ‘முதல்வராக நான் பொறுப்பேற்றதை முன்னிட்டு தனது கனிவான வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நமது மக்களின் […]

உலகம் செய்தி

சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது – ஈரான் குற்றச்சாட்டு

  • May 10, 2026
  • 0 Comments

சர்வதேச அணுசக்தி முகமை அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பகாயி (Baghaei) , ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஈரானின் ஏவுகணை நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடுவது, சர்வதேச அணுசக்தி முகமையின் அதிகார வரம்பிற்குள் வராது என்று தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “சரிபார்ப்பதே சர்வதேச அணுசக்தி முகமையின் பணியென சுட்டிக்காட்டிய அவர் அரசியல் பிரச்சாரம் செய்வது அல்ல என குறிப்பிட்டுள்ளார் மேலும், […]

இந்தியா செய்தி

புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது – ராகுல் காந்தி

  • May 10, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைகளை நிறைவேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு புதிய தலைமுறை, ஒரு புதிய குரல், ஒரு புதிய தோற்றத்தை தமிழ்நாடு தேர்ந்தெடுத்துவிட்டது என்றும் அவர் கூறினார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் […]

ஆசியா

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10இற்கும் மேற்பட்டோர் பலி!

  • May 10, 2026
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் காவல்சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில்  14 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்  வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை காவல் சாவடி மீது மோதச் செய்து வெடிக்கவைத்துள்ளார். பின்னர், பயங்கரவாதிகள் அந்த இடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கிடையில், தாக்குதலுக்கு உதவ வந்திருந்த மற்ற பாதுகாப்புப் படையினரும், வழியை மறித்திருந்த பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா

“சாப்பாட்டிற்குக் கூட சிரமப்பட்டோம்”: விஜய் எதையும் மறக்கவில்லை

  • May 10, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவரது தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அவர், “விஜய் பிறந்தபோது நான் உதவி இயக்குநராக இருந்தேன். அந்த காலத்தில் குடும்ப சூழ்நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “விஜய்யின் சிறுவயதில் சாப்பாட்டிற்குக் கூட மிகவும் சிரமப்பட்டோம். அந்த நாட்கள் அனைத்தும் விஜய்க்கு இன்னும் ஞாபகம் உள்ளது” என நெகிழ்ச்சியுடன் கூறினார். விஜய் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பது ஒரு […]

இலங்கை

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள யாழ்தேவி!

  • May 10, 2026
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரை பயணிக்கும் ‘யாழ் தேவி’ கடுகதி ரயில் சேவை நாளை (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் நான்கு முதலாம் வகுப்பு பெட்டிகள் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆசனங்களை பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள முடியும். ரயில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அல்லது ஆசன முன்பதிவு வசதி கொண்ட ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.