உலகம் செய்தி

ஈரான் சபாநாயகராக Qalibaf மீண்டும் தெரிவு!

ஈரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முகமது பாகர் கலிபாப் (Mohammad Bagher Qalibaf) இன்று திங்கட்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஈரான் அரச ஊடகம் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

சபாநாயகர், பிரதி சபாநாயகர்கள், ஆறு செயலாளர்கள் மற்றும் மூன்று அவதானிப்பாளர்கள் (Observers) உட்பட நாடாளுமன்றத்தின் 12 நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்பட்டது.

நாடாளுமன்றப் பிரதிநிதிகள் ரகசிய வாக்குப்பதிவு மூலம் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர் என ஈரான் நாட்டு ஊடகமான IRIB தெரிவித்துள்ளது.

ஈரானின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான முகமது பாகர் கலிபாப், அமெரிக்காவுடன் நடைபெறும் அமைதி பேச்சில், ஈரானுக்கு தலைமை வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!