உலகம் செய்தி

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடும் சரிவு

  • May 25, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்க இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், உலக சந்தையில் எண்ணெய் விலைகள் கடுமையாகக் குறைந்துள்ளன. திங்கட்கிழமைக்குள் போர் நிறத்த ஒப்பந்தம் எட்டப்படலாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio தெரிவித்திருந்தார். இதனையடுத்து, உலகளாவிய எண்ணெய் அளவுகோலான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 5.5% வீழ்ச்சியடைந்து பீப்பாயொன்றுக்கு சுமார் $97.90 டொலராக குறைந்துள்ளது. பிற்பகலில் சுமார் $97.70 அளவில் பதிவானது அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளில் […]

இலங்கை

தேர்தல் சட்டங்களில் மாற்றம் : பொதுமக்களிடம் கருத்து கோர பரிந்துரை!

  • May 25, 2026
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை   மீளாய்வு செய்து, பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான குழுவினர்  இன்று கூடிய கலந்துரையாடினர். இதன்போதே மக்களின் கருத்துக்களை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தல் மீளாய்வு நடைமுறை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்கும் குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

உலகம்

தைவானுக்கான ஆயுத விற்பனையில் நீண்டகால கொள்கையை மீறிய ட்ரம்ப்!!

  • May 25, 2026
  • 0 Comments

ஈரானுடனான போர் தொடர்கின்ற நிலையில் தைவானுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்கக் கடற்படையின் தற்காலிகத் தலைமைச் செயலாளர் ஹங் காவோ (Hung Cao) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 14 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் “மிக விரிவாக” விவாதித்ததாகவும், “அடுத்த குறுகிய காலத்திற்குள்” ஒரு முடிவை எடுப்பதாகவும் ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதன் மூலம், தைவான் குறித்த முடிவுகளை சீனாவுடன் இணைந்து […]

இலங்கை செய்தி

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லட்சத்தை அண்மித்தது

  • May 25, 2026
  • 0 Comments

நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 லடசத்தை அண்மித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 9 லட்சத்து 90 ஆயிரத்து 32 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி […]

இலங்கை செய்தி

மூளைக்காய்ச்சல் பரவல் – புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

  • May 25, 2026
  • 0 Comments

பாடசாலைகள் உள்ளிட்ட பல பகுதிகளில் மூளைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து சுகாதாரத் துறைகள் வைத்தியசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, நோயை கண்டறிதல், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ நடைமுறைகள், மாதிரி பரிசோதனைகள் மற்றும் பாடசாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கைகளை அடிக்கடி கழுவுதல், இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது […]

உலகம்

போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நம்ப முடியாது என்றும், ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாவதைத் தடுக்க இஸ்ரேல் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். அத்துடன் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது,  என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போரை நிறைவுக்கு கொண்டுவரும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த இணக்கப்பாடும் எட்டவில்லை.  இதற்கிடையே ஹோர்மூஸ் […]

செய்தி தமிழ்நாடு

தமிழக அரசினால் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு – குறு விவசாயிகளுக்கு முழு சலுகை

  • May 25, 2026
  • 0 Comments

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களுக்கு புதிய சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது 2025 மே முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன. இதன்படி, .50,000 ரூபா வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே […]

உலகம்

புட்டின், ட்ரம்ப்பை தொடர்ந்து கிம் ஜாங் உன்னை சந்திக்கும் ஷி ஜின்பிங்!

  • May 25, 2026
  • 0 Comments

சீன அதிபர் ஷி ஜின்பிங் ( Xi Jinping) அடுத்த வாரம் வடகொரியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன ஜனாதிபதி சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆகியோரை சந்தித்ததை தொடர்ந்து வடகொரிய தலைவரை சந்திக்கவுள்ளார். ஷி ஜின்பிங்கின் இந்தப் பயணம், கிம் ஜாங் உன் மற்றும்  ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு உந்துதலை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்ப்பதாக  தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. இந்தப் […]

இலங்கை செய்தி

ஹஜ் மற்றும் வெசாக் பண்டிகைகளை முன்னிட்டு சிறைக்கைதிகள் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு

  • May 25, 2026
  • 0 Comments

எதிர்வரும் ஹஜ் பெருநாள் மற்றும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களைச் சந்திப்பதற்கான விசேட வாய்ப்பை சிறைச்சாலைகள் திணைக்களம் வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட பார்வையாளர் சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த தினங்களில் கைதிகளைப் பார்ப்பதற்கு வருகை தரும் உறவினர்கள், அவர்களுக்கான உணவு மற்றும் இனிப்புப் பண்டங்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது., அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள் […]

இலங்கை செய்தி

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவம்: அவசரமாக கூடிய பெண் எம்.பிக்கள்: நடந்தது என்ன?

  • May 25, 2026
  • 0 Comments

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இன்று (25) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் […]