பொழுதுபோக்கு

தேவாவின் தம்பி சபேஷ் காலமானார்

  • October 23, 2025
  • 0 Comments

இசையமைப்பாளர் சபேஷ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரான சபேஷ், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 68. சபேஷின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தி விளையாட்டு

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி – தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

  • October 23, 2025
  • 0 Comments

பிரபல இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் (Adelaide) மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களை பெற்றது. […]

பொழுதுபோக்கு

பிக்பாஸில் அதிரடியாக விளையாடிய போட்டியாளர் திடீர் வெளியேற்றம்

  • October 23, 2025
  • 0 Comments

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9 நிகழ்ச்சியில் விளையாடி வந்த ஆயிஷா உடல்நல குறைவு காரணமாக வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழில் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியவர் தான் ஆயிஷா. தற்போது தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் சீசன் 9 நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வைல்டு கார்டில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து, தீயாக விளையாடி வந்த நிலையில் தற்போது அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளார். திடீர் என உடல்நல குறைவு ஏற்பட்டதன் […]

செய்தி

லண்டன் முழுவதும் அவசர சேவைகளுக்கு பதிலளிக்க ட்ரோன்களை அனுப்பும் காவல்துறை!

  • October 23, 2025
  • 0 Comments

பிரித்தானியா – லண்டன் முழுவதும் அவசர தொலைபேசிகளில் இருந்து வரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் சம்பவ இடத்திற்கு ட்ரோன்களை அனுப்பும் முன்னோடி திட்டம் இன்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. குறித்த ட்ரோன்களில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் (cameras) நேரடி காட்சிகளை ஸ்ட்ரீமிங் (streaming) செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொலைதூர கட்டடத்தில் ஏதேனும் ஒரு குற்றச்செயல் இட்பெற்றால் அதனை இனங்காண இலகுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி விரைவான உளவுத்துறையை வழங்குதல், காணாமல் போனவர்களின் விசாரணைகளுக்கு உதவுதல், […]

உலகம்

ரஷ்யாவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் பலி -புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் உரால்ஸில் (Urals) உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில்  12 பேர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். கஜகஸ்தானின் (Kazakhstan) எல்லையை ஒட்டிய செல்யாபின்ஸ்க் (Chelyabinsk) பிராந்தியத்தின் கோபிஸ்க் (Kopeisk) மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தொழிற்சாலையில் இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணத்தை ஆளுநர் வெளியிடவில்லை. இருப்பினும் ட்ரோன் தாக்குதலால் வெடி விபத்து ஏற்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்  சம்பவத்தில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் விறகடுப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு – NHS எச்சரிக்கை!

  • October 23, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விறகு அடுப்புக்கள் மற்றும் திறந்த அடுப்புக்களின் காரணமாக ஆண்டிற்கு 2500 பேர் உயிரிழப்பதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவற்றை தடை செய்வதன் மூலம் ஆண்டுக்கு 54 மில்லியன் பவுண்ட்ஸை சேமிக்க முடியும் என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு £164 மில்லியனுக்கும் அதிகமான உற்பத்திச் செலவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நிலக்கரிகளை  எரிப்பது காற்று மாசுப்பாட்டிற்கு முக்கிய பங்காற்றுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்  நுண்துகள்கள் நுரையீரலிலும் இரத்த ஓட்டத்திலும் ஆழமாக […]

ஐரோப்பா

LNG இறக்குமதி தடை உட்பட ரஷ்யாவிற்கு எதிரான 19வது தடை தொக்குப்பை அங்கிகரித்த EU

  • October 23, 2025
  • 0 Comments

மோதல் தொடர்பாக ரஷ்யாவிற்கு எதிரான தடைகளின் 19வது தொகுப்பை ஐரோப்பிய ஒன்றிய(EU) உறுப்பு நாடுகள் புதன்கிழமை(22) அங்கீகரித்தன, இதில் ரஷ்ய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு(LNG) இறக்குமதி மீதான தடையும் அடங்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் டென்மார்க் தலைவர் தெரிவித்துள்ளார். LNG இறக்குமதி தடை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும், குறுகிய கால ஒப்பந்தங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு முடிவடையும் மற்றும் நீண்ட கால ஒப்பந்தங்கள் ஜனவரி 1, 2027-க்கு முன் நிறுத்தப்படும். இந்த முழுத் தடையும், ரஷ்ய […]

இந்தியா

இரு தனித்தனி சோதனைகளில் 19 கோடிக்கு மேல் மதிப்புள்ள போதைபொருளை பறிமுதல் செய்த மும்பை சுங்கத்துறையினர்

  • October 23, 2025
  • 0 Comments

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்திற்கு ஹாங்காங்கிலிருந்து போதைப்பொருள் கடத்திச் செல்வதாகச் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங்கிலிருந்து மும்பை வந்த பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிரச் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது இரண்டு பயணிகளிடமிருந்து 7.864 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 7.86 கோடி எனத் தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபர் இருவரையும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது […]

உலகம்

700,000 ஆண்டுகளுக்கு பின் உயிர்ப்புடன் இருப்பதற்கான சமிக்ஞைகளை வெளியிட்ட எரிமலை!

  • October 23, 2025
  • 0 Comments

ஈரான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டஃப்தான் எரிமலை  (Taftan volcano) தற்போது உயிர்ப்புடன் இருப்பதற்கான அறிகுறிகளை காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 700,000 ஆண்டுகளாக குறித்த எரிமலை செயலற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜியோபிசிகல் (Geophysical) ரிசர்ச் லெட்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஜூலை 2023 மற்றும் மே 2024 க்கு இடையில் எரிமலையின் உயரம் 3.5 அங்குலம் உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அதன் மேற்பரப்பிற்கு அடியில் குறிப்பிடத்தக்க வாயு அழுத்தம் அதிகரிப்பதைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த […]

உலகம்

மெக்சிக்கோ(Mexico)வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

  • October 23, 2025
  • 0 Comments

மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் நிலச்சரிவில் முழுவதுமாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாக மாறியுள்ளது. இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 78 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ […]