உலகம்

மெக்சிக்கோ(Mexico)வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு

மெக்சிக்கோவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த அடைமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏராளமான முக்கிய இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான, மலைப் பகுதிகளின் பாதைகள் நிலச்சரிவில் முழுவதுமாக முடங்கியுள்ளதால், அங்கு சிக்கியவர்களை மீட்பது கடும் சவாலானதாக மாறியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றின் பாதிப்புகளில் இதுவரை 78 பேர் பலியானதாகவும், 27 பேர் மாயமானதாகவும், மெக்சிகோ அரசு அறிவித்துள்ளது.

இதுபற்றி, செய்தியாளர்கள் மத்தியில் பேசிய மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம்(Claudia Sheinbaum), பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டதுடன், இணைப்பு வழிகள் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சுமார் 1 இலட்சம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் பெசோஸ் நிவாரண நிதியை அளிப்பதாகவும், ஜனாதிபதி ஷீன்பாம் அறிவித்துள்ளார்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்