போர்காலத்தைவிடவும் ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை – மஹிந்த கட்சி குற்றச்சாட்டு!
போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டுமென துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் […]













