வடக்கு, கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் மக்களிடம் ஒப்படைப்பு!
வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஜனவரி 1, 2025 நிலவரப்படி வடக்கில் மொத்தம் 672.24 ஏக்கர் நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 86.24 ஏக்கர் தனியார் நிலங்களும், இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 586 ஏக்கர் நிலங்களும் இவற்றில் அடங்குவதாகவும் […]













