இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் ஒன்றிணைவு ஆளும் கட்சிக்கு சவாலாக அமையாது!

  • October 24, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சிகளுக்கு சவால் என்பதாலேயே ஒன்றிணைந்து பயணிப்பது பற்றி பரிசீலிக்கின்றன. அது அத்தரப்புகளின் சுயநல அரசியலின் வெளிப்பாடாகும் எனவும் அமைச்சர் கூறினார். ” நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளை அவர்கள் ஒன்றிணையவில்லை. போர் நடந்த காலகட்டத்தில்கூட இணைந்து பயணிக்கவில்லை. தற்போது இணைகின்றனர் எனில் அது அவர்களின் வங்குரோத்து அரசியலை வெளிப்படுத்துகின்றது.” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

உலகம்

காசாவில் பேரழிவை ஏற்படுத்தும் பசி நெருக்கடி- விடுக்கப்பட்ட எச்சரிக்கை

  • October 24, 2025
  • 0 Comments

காசாவில் பசி நெருக்கடியானது பேரழிவை ஏற்படுத்துவதாக, ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மனிதாபிமான விநியோகங்களைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என, சர்வதேச உதவிக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. முற்றுகையிடப்பட்ட பகுதிகளுக்குள் கொண்டு செல்லப்படும் பொருட்கள் அங்கு வசிக்கும் மக்களின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனவும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், பாலஸ்தீனப் பகுதிக்குள் […]

இந்தியா

இந்தியாவில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இருவர் கைது!

  • October 24, 2025
  • 0 Comments

இந்தியாவில் தற்கொலைக்குண்டு தாக்குதல்களுக்கு பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படும் இருவர் டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் டெல்லியைச் சேர்ந்தவர், மற்றவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அட்னான் […]

இலங்கை

இலங்கையில் பாரிய சரிவை சந்தித்த தங்கத்தின் விலை

  • October 24, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி, ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை 77,000 ரூபாய் குறைந்துள்ளது. உள்ளூர் சந்தையில் முதன்முறையாக, கடந்த வாரம் 24 தங்கம் பவுன் ஒன்று 410,000 ரூபாயாக உயர்ந்தது. இருப்பினும், நேற்று, 24 கரட் தங்கம் பவுன் விலை  330,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுன் விலை 302,300 ரூபாயாகவும் பதிவானது. அதன்படி, நேற்று மட்டும் தங்கத்தின் விலை […]

உலகம்

வெனிசுலாவிற்கு (Venezuela) போர் விமானங்களை அனுப்பிய அமெரிக்கா – மதுரோவின் (Maduro) ஆட்சியை கவிழ்க்க சூழ்ச்சியா? 

  • October 24, 2025
  • 0 Comments

அமெரிக்க குண்டுவீச்சு விமானங்களின் மற்றொரு குழு, வெனிசுலா (Venezuela) நோக்கி புறப்பட்டுச் சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் கரீபியன் கடலிலும் வெனிசுலாவைச் சுற்றியுள்ள நீரிலும் வழக்கத்திற்கு மாறாக ஒரு பெரிய படையை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்நடவடிக்கையானது  வெனிசுலா (Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின்  (Nicolás Maduro) அரசாங்கத்தை வீழ்த்தக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து அமெரிக்க இராணுவம், வெனிசுலாவைச் (Venezuela) சுற்றியுள்ள கடற்பரப்புகளில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அண்மையில் போதைப்பொருள் இருந்த கப்பல் […]

இலங்கை

இலங்கையில் 16 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை – 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!

  • October 24, 2025
  • 0 Comments

நுவரெலியா, கண்டி, பதுளை, குருணாகல், காலி உட்பட நாட்டில் 16 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5, 361 குடும்பங்களைச் சேர்ந்த 21, 778 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால் நால்வர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், மண்சரிவால் 2 வீடுகள் முழுமையாகவும், 591 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று முற்பகல் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் காலி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. எட்டு […]

ஐரோப்பா

அமெரிக்கத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

  • October 24, 2025
  • 0 Comments

அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது விதித்துள்ள தடைகள் குறித்துப் பேசிய புட்டின், சுய மரியாதை கொண்ட எந்த நாடும் அதன் மக்களும் நெருக்குதலுக்குப் அடிபணியமாட்டார்கள் என திட்டவட்டமாக அறிவித்தார். இந்தத் தடைகள் ரஷ்யப் பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதிக்காது. மாறாக அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளே பாதிப்படையும் என அவர் குறிப்பிட்டார். உலகச் சந்தையில் எண்ணெய் இருப்பு […]

இலங்கை

இலங்கையில் தென்படும் வால் நட்சத்திரம்!

  • October 24, 2025
  • 0 Comments

C/2025 A6’ எனப்படும் வால் நட்சத்திரத்தை இன்று மாலை வானில் தென்படும் என்று விண்வெளி விஞ்ஞானி கிஹான் வீரசேகர அறிவித்தார். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, மாலை 6.30 மணி முதல் சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும் என்று அவர் கூறினார். மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்று அவர் மேலும் கூறினார். அமெரிக்காவில் […]

இலங்கை

ஆளும், எதிர்க்கட்சி பிரமுகர்கள் டெல்லி பயணம்!

  • October 24, 2025
  • 0 Comments

இலங்கையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த முக்கிய இரு அரசியல் பிரமுகர்கள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்கமைய துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக எதிர்வரும் 27 ஆம் திகதி டெல்லி செல்கின்றார். மும்பையில் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான இந்திய கடல்சார் வாரத்தில் பங்கேற்பதற்காகவே அவர் அங்கு செல்கின்றார். இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சினால், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, […]

இலங்கை

போர்காலத்தைவிடவும் ஆபத்தான சூழ்நிலையில் இலங்கை – மஹிந்த கட்சி குற்றச்சாட்டு!

  • October 24, 2025
  • 0 Comments

போர்காலத்தில் புலிகள்கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொலை செய்யவில்லை. போர் காலத்தைவிடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது படு பயங்கரமாகும். தமக்கு பாதுகாப்பு வேண்டுமென துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானவர் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் […]