பொழுதுபோக்கு

சன் டிவியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவாங்கி…

  • October 23, 2025
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’யின் வெற்றியைக் கண்டு சன் டிவி ஆரம்பித்த நிகழ்ச்சிதான் ‘டாப் குக் டூப் குக்’. ‘சிவாங்கி’ என்றால் இசை நிகழ்ச்சியில் கால் பதித்து, சமையல் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று இன்று அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்தவர். அனைவரின் தனித்துவமான பாடும் திறமை மற்றும் நகைச்சுவையான தன்னிச்சையான தன்மை அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்தது. அந்த வகையில் சிவாங்கிக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது என்றால் அது விஜய் […]

ஐரோப்பா

ஐரோப்பாவை நோக்கிச் சென்ற படகு விபத்து – சிறுவர்கள் உட்பட 40 பேர் பலி

  • October 23, 2025
  • 0 Comments

ஐரோப்பாவை அடைய விரும்பிய குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நேற்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன. இந்தத் துயரச் சம்பவம் துனிசியாவை (Tunisia) அண்டிய மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான இந்தப் படகில் 70-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது. துனிசிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக 20 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களின் […]

இலங்கை

பாதாள குழுவுடன் தொடர்பு – வெலிகம தவிசாளர் ஏன் கைது செய்யப்படவில்லை?

  • October 23, 2025
  • 0 Comments

சுட்டுக்கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தவிசாளருக்குப் பாதாள குழுவுடன் தொடர்புள்ளதெனில், அவர் உயிருடன் இருக்கும்போது ஏன் கைது செய்யப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று நேற்றிரவு இடம்பெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து தெரிவிக்கையில், “நாட்டு மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆட்சியின்கீழ் முதலாவது அரசியல் படுகொலை இடம்பெற்றுள்ளது. எல்லாச் சம்பவங்களையும் […]

உலகம்

காசா அமைதிப் படைக்குழுவில் இணையும் ஆஸ்திரேலியா – நிலைமையை ஆராய பாதுகாப்பு அதிகாரி நியமனம்

  • October 23, 2025
  • 0 Comments

அமெரிக்கா தலைமையிலான காசா அமைதிப் பணிக்குழுவில் ஆஸ்திரேலியாவும் இணையவுள்ளது. இதற்கமைய ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் இஸ்ரேல் செல்லவுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கிடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. 20 அம்ச போர் நிறுத்த அமைதித் திட்டத்தில், காசாவில் சர்வதேச படைகளை நிலைநிறுத்தும் யோசனையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கமைய அமெரிக்கா, பிரிட்டன், இந்தோனேசியா, ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தமது நாடுகளின் படைகளை அனுப்பவுள்ளன. 200 படையினரை அனுப்புவதற்கு அமெரிக்கா […]

இலங்கை

சர்வதேச அழுத்தங்களுக்கு பணியாத தலைமை – ரணிலை பாராட்டும் ஐதேக

  • October 23, 2025
  • 0 Comments

வெளிநாட்டுச் சக்திகளால் அடிபணிய வைக்க முடியாத தலைவரே ரணில் விக்கிரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். அதனால்தான் நாட்டு நலன் கருதி அவர் பின்னால் அணி திரண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ரணில் விக்கிரமசிங்க என்ற பெருந்தலைவருக்குப் பதவி முக்கியம் அல்ல. ஜனாதிபதிப் பதவி, பிரதமர் பதவி என எந்தப் பதவியைக் காட்டியும் அவரை அடிபணிய வைக்க முடியாது. பதவிகள் இல்லாமல் […]

உலகம்

தென்கொரியாவில் களமிறங்கும் ட்ரம்ப் – வடகொரியாவின் செயலால் பதற்றம்

  • October 23, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட முக்கியமான உலகத் தலைவர்கள் அடுத்த வாரம் தென்கொரியாவில் ஒன்றுகூடவுள்ள நிலையில், வடகொரியா அதி நவீன ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் அடுத்த வாரம் ஆசியா-பசிபிக் பொருளாதார மாநாடு நடைபெறுகின்றது. அமெரிக்கா, சீனா மற்றும் ஏனைய சில முக்கிய நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். இம்மாநாட்டை முன்னிட்டு தென்கொரியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வடகொரியா ராணுவம் நேற்று அதி நவீன ஏவுகணைகளை வானில் ஏவி […]

கருத்து & பகுப்பாய்வு

பூமியை தாக்கவுள்ள சூரிய புயல் – ஏற்படவுள்ள பேரழிவு தொடர்பில் எச்சரிக்கை

  • October 23, 2025
  • 0 Comments

பூமியை தாக்கவுள்ள ஆபத்தான சூரிய புயல் தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிரச் சூரியப் புயல்கள் எப்போது பூமியை தாக்கும் என துல்லியமாகக் கணிக்க முடியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர். இந்த புயல் பூமியை தாக்கும் பட்சத்தில் உலகின் பல பாகங்களில் நீண்ட காலத்திற்கு மின்சாரம் இல்லாத பாரிய நெருக்கடி ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். சூரியப் புயல் பூமியை மூன்று அலைகளில் தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் வரும் மின்காந்த […]

ஐரோப்பா

ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடை – புட்டினுக்கு அழுத்தம் கொடுக்க ட்ரம்ப் முயற்சி

  • October 23, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் இரு மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களை இலக்கு வைக்கும் வகையில் அமெரிக்கா புதிய தடைகளை அறிமுகம் செய்துள்ளது. உக்ரேனுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) முயற்சி செய்து வருகின்றார். அதற்கமைய, தடைகளை விதித்து ரஷ்யாவின் மீது அழுத்தம் கொடுப்பதே இதன் நோக்கமாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் ஓவல் அலுவலகத்தில் (Oval Office) நேட்டோ செயலாளர் நாயகம் மார்க் ருத்தேவை (Mark Rutte) சந்தித்த பின் […]

ஐரோப்பா

ஐஸ்லாந்தில் முதன்முறையாக நுளம்புகள் கண்டுபிடிப்பு – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

  • October 23, 2025
  • 0 Comments

ஐஸ்லாந்தில் முதன்முறையாக நுளம்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகி, அந்நாட்டு விஞ்ஞானிகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் நுளம்புகள் இல்லாத இரு முக்கிய நாடுகளில் ஒன்றாக இதுவரை ஐஸ்லாந்து அறியப்பட்டிருந்தது. மற்றையது அன்டார்ட்டிக்கா ஆகும். பல வாரங்களாக நடத்திய விரிவான ஆய்வின் முடிவில் இந்த மூன்று நுளம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பூச்சிகளில் தீவிர அக்கறை கொண்ட ஆர்வலரான யோன் ஜல்ரசன் (Gísli Jón Jónasson) தெரிவித்துள்ளார் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. சமீப காலமாக சுற்றுச்சூழல் உஷ்ணம் ஐஸ்லாந்தில் […]

செய்தி

காஸா மனிதாபிமான உதவி – இஸ்ரேலுக்கு ஐ.நா. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  • October 23, 2025
  • 0 Comments

காஸாவில் வாழும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செல்வதை இலகுபடுத்த வேண்டிய கடமை இஸ்ரேலுக்கு உண்டு என ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றம் (ICJ) உத்தரவிட்டுள்ளது. பலஸ்தீனர்கள் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமான தேவைகளையும் இஸ்ரேல் பூர்த்தி செய்ய வேண்டும் என சர்வதேச நீதிமன்றம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கு நிலவரம் குறித்து ஆலோசனை ரீதியான கருத்தை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன் மூலம், காஸா பகுதிக்குள் உணவு, நீர், மருந்துப் பொருட்கள் மற்றும் பிற அடிப்படை உதவிகள் தடையில்லாமல் செல்வதற்கு இஸ்ரேல் […]