உலகம்

சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜப்பானும் ஆஸ்திரேலியாவும் உறுதி

  • October 27, 2025
  • 0 Comments

சுதந்திரமான இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை உருவாக்க ஜப்பானும், ஆஸ்திரேலியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள இரு நாடுகளின் தலைவர்களும் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இரு தரப்பு உறவை வலுப்படுத்தல், பிராந்திய பாதுகாப்பு, பொருளாதாரம் உட்பட முக்கிய பல விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன. “குவாட்” அமைப்பில் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன. அதேபோல […]

இலங்கை செய்தி

பாதாளக் குழு நடவடிக்கை – அரசாங்கத்தின் கதை முடிந்துவிடும் – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை

  • October 27, 2025
  • 0 Comments

பாதாளக் குழுக்களுக்கு முடிவு கட்டும் போர்வையில் மற்றுமொரு குழுவை வளர்ப்பதற்கு முற்பட்டால் அரசாங்கத்தின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு: “பாதாளக் குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. எனினும், இதற்குரிய நடவடிக்கை என்ற போர்வையில் மற்றுமொரு குழுவை கட்டியெழுப்ப முற்பட்டால் இந்த நடவடிக்கை வெற்றியளிக்காது. மற்றுமொரு குழுவை உருவாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என்பதையே அதன் செயற்பாடு வெளிப்படுத்துகின்றது. அவ்வாறு […]

பொழுதுபோக்கு

102ஆவது வயதில் உயிரிழந்தார் சினேகனின் தந்தை

  • October 27, 2025
  • 0 Comments

25 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500க்கும் அதிகமான படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி தனக்கென தனி இடம் பிடித்த சினேகன் வீட்டில் துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது சினேகனின் தந்தை சிவசங்கரன் வயது 102 வயது முதிர்வு காரணமாக இன்று உயிரிழந்தார். சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா எந்தவொரு விசேஷ நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அவர்களது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். எனினும் அவரது தந்தையின் மறைவு அவர்களுக்கு […]

ஐரோப்பா

ஸ்பெயினில் ஆடு மேய்க்கும் தொழில்துறைக்கு வெளிநாட்டவர்களுக்கு அழைப்பு

  • October 27, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் மிகவும் தொன்மையான ஆடு மேய்க்கும் தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த தொழில் வெற்றிடத்தை நிரப்ப ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். ஸ்பெயினின் சிறிய கிராமங்களில் 400 ஆடுகள் கொண்ட மந்தையைப் பராமரிக்கும் பணியில், சூடானைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்கள் நகர்ப்புறங்களுக்குச் சென்றதால், கிராமப்புறங்களில் ஆடு மேய்ப்பதில் ஆர்வம் குறைந்துள்ளது. இதனால், குடியேறிகளுக்கு ஐந்து நாள் பயிற்சி அளித்து பண்ணைகளுடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் […]

இலங்கை

மாகாணசபைத் தேர்தலை குறிவைக்கும் பாதீடு! அநுர அரசாங்கம் போடும் திட்டம்

  • October 27, 2025
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஓர் முக்கிய நகர்வாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை மக்கள் நலன் சார்ந்த பாதீடாக முன்வைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. மக்களுக்கு நேரடியாக தாக்கம் செலுத்தும் விதத்தில் புதிய வரிகள் எதுவும் அமுல்படுத்தப்படமாட்டாதென தெரியவருகின்றது. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள குழுக்கள் ஒடுக்கல் போன்ற செயற்பாடுகளால் மக்கள் மத்தியில் அரசுக்கு ஆதரவு ஏற்பட்டுள்ளது. இதனையும் ஒரு வாய்ப்பாக கருதி […]

உலகம் செய்தி

அவுஸ்திரேலியாவில் பலருக்கு ஆபத்தாக மாறியுள்ள எலி விஷம்

  • October 27, 2025
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் ஒருவகை எலி விஷம் கலந்த உணவை உட்கொண்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குயின்ஸ்லாந்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியிலுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு குழந்தையும் உள்ளடக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம், எலி விஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனி மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்குப் பின், இவர்கள் அனைவரும் பிராடிபாகம் (Brodifacoum) என்ற எலி விஷத்தில் […]

மத்திய கிழக்கு

அமெரிக்கா விதித்துள்ள காலக்கெடு – காசாவில் தேடப்படும் சடலங்கள்

  • October 27, 2025
  • 0 Comments

காசாவில் உயிரிழந்த பிணைக் கைதிகளின் சடலங்களைத் தேடும் நடவடிக்கையை ஹமாஸ் அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்து வரும் 48 மணி நேரத்திற்குள் அனைத்து பிணைக் கைதிகளின் சடலங்களையும் இஸ்ரேலிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய ஹமாஸ் அமைப்பு விரைந்து செயற்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தின் அமைய சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கையளிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள பிணைக் கைதிகளின் […]

இலங்கை

இலங்கை சென்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • October 27, 2025
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2.832 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவரிடமிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 3.4 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள பெண்! கமலா ஹாரிஸ் வெளியிட்ட தகவல்

  • October 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டில் இருந்து தான் விலகவில்லை எனவும், மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாகவும் முன்னாள் பிரதி ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்காவில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடவுள்ளமை வெளிப்படுத்துவதாக BBC  சுட்டிக்காட்டியுள்ளன. BBC  ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தனது அரசியல் செயற்பாடு தொடர்பான தகவலை கமலா ஹாரிஸ் வெளியிட்டிருந்தார். இதன்போது அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதா என்பது […]

கருத்து & பகுப்பாய்வு

பூமிக்கு அருகில் உயிர் வாழத் தகுதியுள்ள கோள் கண்டுபிடிப்பு

  • October 27, 2025
  • 0 Comments

பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியைப் போன்ற ஜி.ஜே 251 சி (GJ 251 c) என்ற புதிய வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வுகள் தொடர்பான விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கிரகம் ‘உயிர் வாழத் தகுதியுள்ள மண்டலத்தில்’ (Habitable Zone) சுற்றி வருவதால், அங்கு திரவ நீர் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஜி.ஜே 251 சி கோள் பூமியைப் போல 3.8 […]