பீகாரில் பரவிய வதந்தி – கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் பலி
பீகாரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய தினம் சிவனுக்கு காணிக்கை செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தபோது, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் மீது மின் கம்பம் விழுந்துவிட்டதாக வதந்தி பரவியதை அடுத்து பீதி ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பீதியே கூட்ட நெரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது நிலமை கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





