ஐரோப்பா செய்தி

வரிசெலுத்துவோரின் பணத்தை புகலிட விடுதிகளுக்காக செலவழிக்கும் பிரித்தானிய அரசாங்கம்!

  • October 27, 2025
  • 0 Comments

பிரித்தானிய அரசாங்கம் வரி செலுத்துவோரின்  பில்லியன் கணக்கான பவுண்டுகளை புகலிட விடுதிக்காக செலவிட்டுள்ளதாக அறிக்கையொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்பார்க்கப்படும் செலவுகள் மூன்று மடங்காக அதிகரித்து £15 பில்லியனைத் தாண்டியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை பராமரிப்பதற்காக அரசாங்கம் பல பில்லியன் பவுண்டுகளை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டில் வரி செலுத்துவோரின் சொத்துக்களை வீணடிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. என்னதான் […]

பொழுதுபோக்கு

மீண்டும் மீண்டும் பாலகிருஷ்ணாவுடன் இணையும் நயன்தாரா

  • October 27, 2025
  • 0 Comments

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் சிரஞ்சீவி நடிக்கும் ‘Mana Shankara Vara Prasad Garu’ படத்தில் நயன்தாரா நடிக்கின்றார். பாலகிருஷ்ணா தற்போது ‘அகண்டா 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆண்டு இறுதியில் திரைக்கு வருகிறது. ‘அகண்டா 2‘படத்தை தொடர்ந்து பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக […]

விளையாட்டு

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அவசரப் பிரிவில் அனுமதி!

  • October 27, 2025
  • 0 Comments

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விலா எலும்புக் கூண்டு காயம் காரணமாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐயர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் சுமார் ஐந்து முதல் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற […]

இலங்கை

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!!

  • October 27, 2025
  • 0 Comments

பொலிஸ்மா அதிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்தார். பாதாளக் குழுக்களுடன் தனக்கு தொடர்புள்ளது என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை அடிப்படையாகக்கொண்டே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறினார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ உயிர் அச்சுறுத்தல் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து எனக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது கருத்து கூறுவதால் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ள NHS சேவை!

  • October 27, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் NHS தேசிய சுகாதார சேவை நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்பாராத செலவுகளை ஈடுகட்ட £3 பில்லியன் வரை நிதி ஒதுக்கப்படாவிட்டால் வேலைகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறக்கட்டளைகள் மற்றும் பிற சுகாதார அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் NHS கூட்டமைப்பு மற்றும் NHS வழங்குநர்கள், இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் பணிநீக்கங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஈடுகட்டும் செலவு, மருந்துகளுக்கு அதிக பணம் செலுத்துவது ஆகியவை சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுகாதாரத் […]

பொழுதுபோக்கு

கண்ணீரில் மூழ்கிய “சரிகமப” மேடை: இலங்கையர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…

  • October 27, 2025
  • 0 Comments

சிறந்த பாடகர், பாடகிகளை தெரிவு செய்வதற்காக ஒவ்வொரு செனல்களும் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. ஆனால் இந்த போட்டியில் விஜய் டிவி மற்றும் ஜீ டிவி செனல்களுக்கு இடையில்தான் போட்டி மும்முரமாக இருக்கும். இரண்டு செனல்களும் சரிக்கு சமமாக தமது படைப்புக்களை கொண்டு வருகின்றார்கள. சிறந்த தொகுப்பாளர்களை இறக்கி மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்த நடுவர்களை வைத்து போட்டிகளை நடத்துகின்றன. அந்த வகையில் தற்போது ஜீ தமிழின் சரிகமப இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி போட்டியாளர்களை தெரிவு […]

இலங்கை

இலங்கையில் வாகன பழுதுபார்புக்காக மட்டும் 645 மில்லியன் ரூபாய் செலவு!

  • October 27, 2025
  • 0 Comments

இலங்கையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் வாகன பழுதுபார்ப்புக்காக 645 ரூபாய் மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன் தொடர்புடைய வருடாந்திர விரிவான மேலாண்மை தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, ஆண்டு முழுவதும் 53 பழுதுபார்ப்பு சம்பவங்கள் காணப்பட்டன, சில வாகனங்கள் ஒரே ஆண்டில் 10 முதல் 17 முறை பழுதுபார்க்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 189 வாகனங்களுக்கு பழுதுபார்ப்பு செலவுகள் 1 மில்லியன் ரூபாய்முதல் 28 மில்லியன் வரை இருந்ததாகவும், அவற்றின் மதிப்பிடப்பட்ட […]

இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் கூட்டு அரசியல் சமர் 21 ஆம் திகதி ஆரம்பம்!

  • October 27, 2025
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஏதேச்சாதிகாரப் பயணத்தைக் கண்டித்தும், மக்களுக்கான ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் கூட்டு அரசியல் சமரை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரமாண்ட கூட்டத்தை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு நுகேகொடையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று ஊடகச் சந்திப்பை நடத்தின. இதன்போதே முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேற்படி தகவலை வெளியிட்டார். மக்களின் வாழும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும், […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவுள்ள பல நாடுகள்: ரஷ்யாவுக்கு காத்திருக்கும் நெருக்கடி

  • October 27, 2025
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் விரைவில் புதிய நாடுகள் இணைத்துக்கொள்ளப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் தமது உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டு, ரஷ்யாவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன், மால்டோவா மற்றும் ஜோர்ஜியா ஆகிய மூன்று நாடுகளும் விண்ணப்பித்துள்ளன. இந்த மூன்று நாடுகளும் ஒன்றியத்தில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை (Geopolitical Significance) அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. உக்ரைன் […]

இலங்கை

வெளிநாட்டு வேலைகளுக்காக செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • October 27, 2025
  • 0 Comments

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5 சதவீதத்தினால் குறைந்துள்ளது எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. மத்திய வங்கியின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 37 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்றுள்ளனர். பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு ஊதிய உயர்வு ஆகியவை வெளிநாட்டுத் தொழிலாளர் இடம்பெயர்வைக் குறைத்துள்ளது எனக் கூறப்படுகிறது. அதேவேளை, தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் (Remittances) செப்டம்பரில் 695.7 […]