உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவுள்ள பெண்! கமலா ஹாரிஸ் வெளியிட்ட தகவல்

  • October 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் அரசியல் செயற்பாட்டில் இருந்து தான் விலகவில்லை எனவும், மக்களுக்காக தொடர்ந்தும் பணியாற்றவுள்ளதாகவும் முன்னாள் பிரதி ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்காவில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் அவர் போட்டியிடவுள்ளமை வெளிப்படுத்துவதாக BBC  சுட்டிக்காட்டியுள்ளன. BBC  ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தனது அரசியல் செயற்பாடு தொடர்பான தகவலை கமலா ஹாரிஸ் வெளியிட்டிருந்தார். இதன்போது அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவதா என்பது […]

கருத்து & பகுப்பாய்வு

பூமிக்கு அருகில் உயிர் வாழத் தகுதியுள்ள கோள் கண்டுபிடிப்பு

  • October 27, 2025
  • 0 Comments

பூமிக்கு 18 ஒளி ஆண்டுகள் தொலைவில் உயிரினங்கள் வாழக்கூடிய கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியைப் போன்ற ஜி.ஜே 251 சி (GJ 251 c) என்ற புதிய வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விண்வெளி ஆய்வுகள் தொடர்பான விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தக் கிரகம் ‘உயிர் வாழத் தகுதியுள்ள மண்டலத்தில்’ (Habitable Zone) சுற்றி வருவதால், அங்கு திரவ நீர் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். ஜி.ஜே 251 சி கோள் பூமியைப் போல 3.8 […]

உலகம் செய்தி

அமெரிக்காவுக்கு நிகராக மாறவுள்ள சிங்கப்பூர் – பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள புரட்சி

  • October 27, 2025
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகராக சிங்கப்பூரின் நாணய பெறுமதி பாரிய அளவில் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 2040ஆம் ஆண்டில் இதற்கான வாய்ப்பு ஏற்படும் என சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS வங்கி தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 15 ஆண்டுகளில் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் உள்ள முதல் 30 நிறுவனங்களின் Straits Times குறியீடு 10,000 புள்ளிகளை தாண்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2.5 வீதம் அதிகரிக்கும் என DBS […]

இந்தியா செய்தி

உத்தர பிரதேசத்தில் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

  • October 26, 2025
  • 0 Comments

உத்தர பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹரிஷ்சந்திராவின்(Harishchandra) மனைவி 35 வயது சங்கீதா, தனது இரண்டு குழந்தைகளான 3 வயது சிவான்ஷ்(Shivansh) மற்றும் 1 வயது சுபாங்கரை (Subhankar) கழுத்தை நெரித்து கொன்றதாக கச்வா(Kachwa) காவல் நிலைய அதிகாரி அமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் தனது வீட்டின் கூரையில் தென்னை நார் கயிற்றைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளனர். […]

செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – இந்தியா, வங்கதேசம் போட்டி மழையால் ரத்து

  • October 26, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், நவி மும்பை(Navi Mumbai) மைதானத்தில் நடைபெற்ற தொடரின் இறுதி லீக் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்று இந்திய அணி முதலில் பந்து வீச்சை தெரிவி செய்தது. ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே மழை குறுக்கிட்டதால் போட்டி 27 ஓவராகக் குறைக்கப்பட்டது. அந்தவகையில், முதலில் களமிறங்கிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை […]

உலகம் செய்தி

சமூக ஊடகங்களில் வைரலான அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நடனம்

  • October 26, 2025
  • 0 Comments

தெற்காசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump), முதலாவதாக மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின்(Anwar Ibrahim) அழைப்பை ஏற்று ஆசியான்(ASEAN) உச்சி மாநாட்டில் பங்கேற்க கோலாலம்பூரை(Kuala Lumpur) வந்தடைந்தார். டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஆசியாவுக்கு செல்லும் இரண்டாவது பயணம் இதுவாகும். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதிக்கு கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு அம்சமாக விமான நிலையத்தில் மலேசியாவின் பாரம்பரிய உடைகள் அணிந்த நடனக் கலைஞர் தங்கள் நடனம் […]

உலகம் செய்தி

ஆசியான் கூட்டமைப்பில் 11வது உறுப்பினராக இணைந்த கிழக்கு திமோர்(East Timor)

  • October 26, 2025
  • 0 Comments

ஆசியாவின் இளைய நாடான கிழக்கு திமோர்(East Timor) தென்கிழக்கு ஆசிய அமைப்பான ஆசியானின்(ASEAN) 11வது உறுப்பினராக இணைந்துள்ளது. திமோர்-லெஸ்டே(Timor-Leste) என்றும் அழைக்கப்படும் 1.4 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நாடு ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். மேலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில் கிழக்கு திமோர் இணைவது 14 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆகும். கோலாலம்பூரில் நடந்த வருடாந்திர உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் ஆசியான் தலைவர்களால் கிழக்கு திமோர் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அங்கத்துவம் குறித்து பிரதமர் […]

உலகம் செய்தி

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட மாடல் அழகி

  • October 26, 2025
  • 0 Comments

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்(Yemen’s Houthi rebels), மாடல் என்டிசார் அல்-ஹம்மாடியை (Entisar al-Hammadi) கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து விடுவித்துள்ளனர். 23 வயதான என்டிசார் அல்-ஹம்மாடி, பிப்ரவரி 2021ல் ஏமன் தலைநகரான சனாவில்(Sanaa) ஒரு புகைப்பட படப்பிடிப்புக்குச் சென்றபோது கைது செய்யப்பட்டார். விபச்சாரம், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் முறைகேடு ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், கைது செய்யப்பட்டபோது, ​​ஹம்மாடி ” உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் […]

இந்தியா செய்தி

கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் நடிகர் விஜய்

  • October 26, 2025
  • 0 Comments

கடந்த மாதம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்(Tamilaga Vetri Kalagam) தலைவருமான விஜய் நாளை மாமல்லபுரத்தில்(Mamallapuram) உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். கரூர் மற்றும் சில மாவட்டங்களைச் சேர்ந்த குடும்பங்கள், தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துகள் மூலம் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரப்பட உள்ளனர். “இது ஒரு தனிப்பட்ட நிகழ்வாக இருக்கும், ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. விஜய் ஒவ்வொரு குடும்பத்தையும் […]

உலகம் செய்தி

அமைச்சரவையில் இரண்டு இளைஞர்களுக்கு பதவி வழங்கிய நேபாளத்தின் இடைக்கால பிரதமர்

  • October 26, 2025
  • 0 Comments

இளைஞர்கள் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட நேபாளத்தின் இடைக்கால அரசாங்கம் இரண்டு இளைஞர்களுக்கு தனது அமைச்சரவையில் பதவி வழங்கியுள்ளது. முன்னாள் சுகாதாரச் செயலாளரான சுதா கௌதம் சுகாதாரம் மற்றும் மக்கள்தொகை அமைச்சராகவும், சமூக ஆர்வலரான பப்லு குப்தா(Bablu Gupta) இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேபாளத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஆட்சி கவிழ்ப்பிற்கு முக்கிய அங்கத்தவர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த ஒரு விழாவில் ஜனாதிபதி ராம் சந்திர பவுடல்(Ram Chandra […]