இலங்கை

இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் இருக்கும் 17000 குழந்தைகள்!

  • October 26, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் 17,000 குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையில் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார். வடமேற்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று (26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் அனைத்து மட்டங்களிலும் குழந்தைகளை கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு குழந்தையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு குழந்தையின் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் […]

ஐரோப்பா

லண்டனில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட பாலியல் குற்றவாளி மீண்டும் கைது!

  • October 26, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் மீளவும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பிய நாட்டவரான ஹடுஷ் கெர்பர்ஸ்லேசி கெபாடு (Hadush Kebatu) நாடு கடத்தப்படுவதற்கு முன்பு ஒரு வருட சிறை தண்டனையை அனுபவித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை HMP செல்ம்ஸ்ஃபோர்டில் (Chelmsford) இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவரை தேடுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில் […]

உலகம்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் ரொக்கெட்டை ஏவிய ஜப்பான்!

  • October 26, 2025
  • 0 Comments

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள H3 ராக்கெட்டை ஜப்பானின் விண்வெளி நிறுவனம் இன்று வெற்றிகரமாக ஏவி சோதனை செய்துள்ளது. தெற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா (Tanegashima) விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட்டின் மேல் HTV-X1 விண்கலத்தை பொருத்தி வெற்றிகரமாக ஏவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்கலம் பிரிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வைக்கப்பட்டது என்று JAXA தெரிவித்துள்ளது. திட்டமிட்டப்படி அனைத்தும் சீராக நடந்தால் பொருட்களை வழங்க இன்னும் சில நாட்களே எடுக்கும் என விண்வெளி நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை

கனதரா ஓயாவில்(Kanadara Oya) இருந்து பெருந்தோகையான தோட்டாக்கள் மீட்பு

  • October 26, 2025
  • 0 Comments

மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில் இருந்து T-56 தாக்குதல் துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும் 41 தோட்டாக்களையும், இரண்டு மகசின்களையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த தோட்டாக்கள் நேற்று சனிக்கிழமை (25) மதவாச்சி காவல் நிலைய அதிகாரிகள் குழுவினரால், கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெடிமருந்துகளை அந்த இடத்திற்கு கொண்டுவந்த நபர்களின் அடையாளத்தை கண்டறிய, மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐரோப்பா

அணுசக்தியால் இயங்கும் பியூரெவெஸ்ட்னிக்(Burevestnik)கப்பல் ஏவுகணை சோதனைகளை முடித்த ரஷ்யா ; புட்டின்

  • October 26, 2025
  • 0 Comments

ரஷ்யா தனது அணுசக்தியால் இயங்கும் பியூரெவெஸ்ட்னிக்(Burevestnik) கப்பல் ஏவுகணையின் தீர்மானகரமான சோதனைகளை முடித்துள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று(26) தெரிவித்தார். இந்த ஆயுதங்களை போர் கடமையில் ஈடுபடுத்த இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும்… இருப்பினும், முக்கிய நோக்கங்கள் இப்போது அடையப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதிகளுடனான சந்திப்பின் போது புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர்களின் தலைவர் வலேரி ஜெராசிமோவ்(Valery Gerasimov), புரெவெஸ்ட்னிக் ஏவுகணை செவ்வாயன்று சுமார் 15 மணி நேரம் நீடித்த […]

உலகம் செய்தி

05 வருடங்களுக்கு பிறகு மீளவும் சீனாவிற்கான விமானசேவைகளை ஆரம்பித்த இந்தியா!

  • October 26, 2025
  • 0 Comments

இந்தியாவும், சீனாவும் இன்று முதல் நேரடி விமான சேவைகளை மீளவும் ஆரம்பித்துள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு இமாலயா பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோதல்களை தொடர்ந்து ஐந்து வருட காலமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது விமான சேவைகளை ஆரம்பிக்க இணங்கியுள்ளன. விமானங்களை மீண்டும் தொடங்குவது “மக்களுக்கு இடையேயான தொடர்பை” அதிகரிக்கும் மற்றும் “இருதரப்பு பரிமாற்றங்களை படிப்படியாக இயல்பாக்குவதற்கு” உதவும் என்று இந்திய அரசாங்கம் கூறியது. இந்தியாவின் மிகப்பெரிய வணிக விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) […]

உலகம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த சாலை விபத்து; 4 பேர் பலி, 16 பேர் காயம்

  • October 26, 2025
  • 0 Comments

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கஸ்னி(Ghazni) மாகாணத்தில் ஹிலக்ஸ்(Hilux) வாகனம் மீது லொரி மோதியதில் குறைந்தது நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகமான TOLOnews இன்று (26) மாகாண அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகர் காபூலை தெற்கு காந்தஹார்(Kandahar) மாகாணத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் உள்ள கராபாக் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நிகழ்ந்தமைக்கு பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதே காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐரோப்பா செய்தி

உக்ரைனை தாக்கிய ரஷ்யா – 03 பேர் பலி!

  • October 26, 2025
  • 0 Comments

உக்ரைன் (Ukrainian)தலைநகர் கீவ்வை (Kyiv) குறிவைத்து ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 07 குழந்தைகள் உட்பட 29 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலில் 19 வயது சிறுமி ஒருவரும் அவரது 46 வயது தாயாரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் கீவ் பகுதியில் ரஷ்யா சுமார் 101 ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது, மேலும் அவற்றில் சுமார் 90 ஆளில்லா விமானங்களை அழிக்க உக்ரைன் படைகள் நடவடிக்கை எடுத்துள்ளன. […]

ஐரோப்பா

பிரான்ஸின் லூவ்ரே (Louvre) அருங்காட்சியக கொள்ளை – இருவர் கைது!

  • October 26, 2025
  • 0 Comments

பாரிஸில் உள்ள லூவ்ரே (Louvre)  அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. லீ பாரிசியன் (Le Parisien) செய்தித்தாள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பாரிஸின் புறநகர்ப் பகுதியான சீன்-செயிண்ட்-டெனிஸைச் (Seine-Saint-Denis) சேர்ந்த ஒருவரும் மற்றயவர் சார்லஸ் டி கோல் (Charles de Gaulle) விமான நிலையத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரான்ஸில் அமைந்துள்ள லூவர் (Louvre) அருக்காட்சியகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்கள்  102 மில்லியன் டொலர் […]

உலகம்

அமெரிக்கா-மலேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

  • October 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் மலேசியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் கைகெழுத்தாகியுள்ளது. அமெரிக்காவுக்கு அரிய கனிமங்களை ஏற்றுமதி செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்யும். 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோலாலம்பூர் வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக வர்த்தக ஒப்பந்தத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன்(Anwar Ibragi) அவர் கையெழுத்திட்டார். இந்த ஒப்பந்தத்தில் அன்வார் இப்ராகிமின் நிர்வாகம் மேற்கொண்ட பல சலுகைககள் உள்ளடங்கியிருக்கின்றன. அவற்றில் அமெரிக்காவுக்கு கனிமங்களை ஏற்றுமதி செய்வதும் அடங்கும். […]