இலங்கை செய்தி

இலங்கையில் இடைத்தரகர்களால் உயரும் தேங்காய் விலை!

  • October 28, 2025
  • 0 Comments

தேங்காய் ஏலத்தில் 134 ரூபாய்க்கு வாங்கப்பட்ட தேங்காய்களை  180 ரூபாய்க்கு  விற்பதன் மூலம் இடைத்தரகர்கள் சுமார்  40-50 ரூபாய் வரை லாபம் ஈட்டுவதாக தேங்காய் சாகுபடி வாரியம் தெரிவித்துள்ளது. தேங்காய்களுக்கு கட்டுப்பாட்டு விலை இல்லாததே கிடங்கு சந்தை விலை உயர்வுக்கு காரணம் என்று வாரியத் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி கூறினார். நிலைமையை நிலைப்படுத்த குறைந்தபட்ச விலையில் தேங்காய் இருப்புக்களை சந்தைக்கு வெளியிடுமாறு இடைத்தரகர் வர்த்தகர்களை அவர் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, தேங்காய் சாகுபடி நிறுவனம், தேங்காய் […]

செய்தி

இலங்கையில் புதிய எதிர்க்கட்சி கூட்டணி உதயம்

  • October 28, 2025
  • 0 Comments

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் குரல் என்ற புதிய எதிர்க்கட்சி கூட்டணியை நேற்று உதயமாக்கிய நிலையில், அக்கூட்டணியால் அரசுக்கு எவ்விதச் சவாலும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. “எதிர்க்கட்சி கூட்டணி குறித்து எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் அணிசேர்வது நல்லது. பின்னர், மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டவர்களை மக்கள் ஒரே குழுவாகத் தோற்கடிக்க முடியும்.” என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நேற்று உதயமான புதிய கூட்டணியில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா […]

இலங்கை

தேசிய புலனாய்வுப்பிரிவு தலைவர் ஓய்வு!

  • October 28, 2025
  • 0 Comments

தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, பாதுகாப்பு சேவையில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். 60 வயதை எட்டிய நிலையில் அவர், பாதுகாப்பு அமைச்சில் தனது பணிகளில் இருந்து விலகியுள்ளார். இராணுவத்தின் முன்னாள் அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய இந்த ஆண்டு ஜனவரியில் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டின் புலனாய்வு வலையமைப்பையும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றினார். புதிய தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் […]

பொழுதுபோக்கு

ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் – அதிர்ச்சியில் திரையுலகம்

  • October 28, 2025
  • 0 Comments

சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறப்போவதாகவும் நேற்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று மர்ம நபர் மூலமாக இந்த மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் ரஜினிகாந்த் வீட்டை சோதனையிட சென்றனர். ஆனால், நடிகர் ரஜினி தனது வீட்டை சோதனையிட சம்மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் […]

வாழ்வியல்

மனச்சோர்வு, மறதி ஏற்படக் காரணம் மற்றும் அதற்கான தீர்வுகள்

  • October 28, 2025
  • 0 Comments

மனித உடலில் கோலின் (Choline) என்ற ஊட்டச்சத்து குறைவாக இருந்தால், பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் குறைபாடு காரணமாக அதிக சோர்வு, திடீர் மறதி அல்லது தசை பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். மனிதனின் நரம்பு மண்டலம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கோலின் (Choline) ஊட்டச்சத்து முக்கியமானது ஆகும். மனித உடல் சிறிதளவு கோலினை உற்பத்தி செய்தாலும், உணவு மூலமே இதன் பெரும்பான்மையான தேவையை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். […]

விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் தற்போதைய நிலைமை தொடர்பில் வெளியான தகவல்

  • October 28, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணியுடன் சிட்னியில் நடந்த போட்டியில் காயமடைந்த இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அலெக்ஸ் கேரி (Alex Carey) அடித்த பந்தை ‘கேட்ச்’ செய்யும் போது இடறி விழுந்ததால், ஷ்ரேயாஸ் ஐயரின் இடது பக்க கீழ்ப்புற நெஞ்சுக் கூட்டில் பலத்த உள் காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு மண்ணீரலில் கிழிவு ஏற்பட்டுள்ளது எனவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தற்போது […]

இலங்கை

இலங்கை அரசியல் எதிர்காலம் ஆபத்தில் – பாதாளக் குழுக்கள் நுழைவது குறித்து எச்சரிக்கை

  • October 28, 2025
  • 0 Comments

போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாளக் குழு உறுப்பினர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்குத் திட்டமிட்டுள்ளனர். எனவே, இப்படியானவர்களுக்கு இடமளிப்பது தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். “போதைப்பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் என்பவற்றுடன் தொடர்புடைய நபர்கள் அரசியலுக்கு வந்துள்ளனர். எதிர்காலத்தில் அவர்கள் தேசிய அரசியலுக்குள் வருவதற்கும் திட்டமிட்டுள்ளனர். எனவே, இவ்வாறானவர்களுக்குக் கட்சியில் அங்கத்துவம் வழங்கல், தேர்தல்களில் போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்கல் என்பன தொடர்பில் கட்சிகள் அவதானத்துடன் செயற்பட […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் AI மீதான காதலால் ஆபத்துக்குள் மூழ்கும் இள வயதினர்

  • October 28, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலிகள் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. YouGov மேற்கொண்ட புதிய ஆய்வின் முடிவுகள் குறித்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆய்வின்படி, ஏழு பேரில் ஒருவர் செயற்கை நுண்ணறிவு செயலி மீது காதல் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். 18 முதல் 24 வயதுடையவர்களுக்கு இவ்வாறான காதல் உணர்வுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஐந்தில் ஒருவர் AI […]

இலங்கை

இலங்கையில் எதிரணிகளின் கூட்டு சமர் – சஜித் அணி புறக்கணிப்பு!

  • October 28, 2025
  • 0 Comments

எதிரணிகளால் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என தெரியவருகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உறுமய உள்ளிட்ட எதிரணிகள் நேற்று கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்தின. தேசிய மக்கள் சக்தியின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையிலும், ஜனநாயகம் மற்றும் மக்களின் வாழும் உரிமையை பாதுகாக்குமாறு கோரியுமே இக்கூட்டம் ஏற்பாடு […]

இலங்கை

பாதாளக்குழு: தெற்குக்கு கறுப்பு புள்ளி: வடக்குக்கு வெள்ளையடிப்பு! – கடும் கோபத்தில் மஹிந்த அணி

  • October 28, 2025
  • 0 Comments

பாதாளகுழு விடயத்தில் தெற்குக்கு கறுப்பு முத்திரை குத்திவிட்டு, வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கையே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இடம்பெறுகின்றது என்று கடும் சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இவ்வாறு விமர்சனத்தை முன்வைத்துள்ளார். “ தெற்குக்கு கறுப்பு கரையை ஏற்படுத்திவிட்டு வடக்குக்கு வெள்ளையடிப்பு செய்யும் நடவடிக்கை தற்போது இடம்பெறுகின்றது. பாதாள குழு, ஐஸ் மற்றும் போதைப்பொருள் உள்ளிட்ட […]