கிழக்கில் இந்தியாவின் 33 அபிவிருத்தி திட்டங்கள்: அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியாவின் பல்துறைசார் நன்கொடையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள 33 கருத்திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்றுவருகின்றது. இதன்போதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்படி தகவலை வெளியிட்டார். இது தொடர்பான அமைச்சரவை யோசனை வருமாறு, ” இந்தியாவின் பல்துறைசார் அனுசரணையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் […]













