உலகம்

வெனிசுலாவில் சுகாதார நெருக்கடி : மருத்துவர்கள் எச்சரிக்கை

  • July 2, 2026
  • 0 Comments

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இரட்டை நிலநடுக்கங்கள் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் நேற்றைய தினம் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து வெனிசுலா மக்கள் நெரிசலான தங்குமிடங்களில் இருப்பதாகவும்,   சுத்தமான நீர் வசதியின்றி தவிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 2,295 பேர் உயிரிழந்ததாகவும், 11,000இற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். நிலநடுக்கங்களின் பின்விளைவுகள் ஒரு பெரிய மருத்துவ நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், இது விரைவாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரும் நாட்களில் மற்றும் வாரங்களில் மேலும் பல உயிர்களைப் பறிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும்  […]

இங்கிலாந்தின் நட்சத்திரக் கேப்டன் ஹாரி கேனின் அதிரடியால், பதிலடி கொடுத்து வெற்றிநடை போட்டு, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து. செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் அதிரடி காட்டி வென்றது இங்கிலாந்து

  • July 2, 2026
  • 0 Comments

அட்லாண்டாவில் (Atlanta) நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு (DR Congo) எதிரான ஆட்டத்தில், ஹாரி கேன் கடைசி நேரத்தில் அடித்த இரண்டு அபார கோல்களால் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட இரு கோல்களே இங்கிலாந்தை அதிர்ச்சி தோல்வியிலிருந்து காப்பாற்றியது. முக்கிய சர்வதேச தொடர் ஒன்றில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் 60 ஆண்டுகால ஏக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் களம் இறங்கியுள்ள தாமஸ் துஷெலின் தலைமையிலான […]

உலகம்

பேச்சுவார்த்தைகளில் இணக்கம் : கமேனியின் இறுதிச் சடங்கை தொடர்ந்து அடுத்த சுற்று பேச்சுவார்த்தை

  • July 2, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து ஈரானும், அமெரிக்காவும் நேற்றைய தினம் பதற்ற தணிப்பு ஒப்பந்தத்தை எட்டியதாக ‘தி நியூயார்க் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. கட்டாரில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கட்டார் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மஜித் அல்-அன்சாரி ,  இப்பேச்சுவார்த்தை நேர்மறையான முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார். மேலும், கத்தாரும் பாகிஸ்தானும் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இரு தரப்பினருடனும் தனித்தனியாகப் […]

ஐரோப்பா

கோர தாண்டவம் ஆடிய ரஷ்யா : கீவ் மீது ஏவுகணை தாக்குதல்!

  • July 2, 2026
  • 0 Comments

ரஷ்ய படைகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கீவ் மீது  ஆளில்லா விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதனால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்தத் தாக்குதல் பல கட்டங்களாக நிகழக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்த நிலையில், குடியிருப்பளர்கள் பலர் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த தாக்குதல்களில் கீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi ) […]

அறிவியல் & தொழில்நுட்பம்

உலகில் முதல் முறையாக ரோபோக்களுக்கு பாடசாலை – சீனாவில் அசத்தல்

  • July 1, 2026
  • 0 Comments

உலகில் முதல் முறையாக ரோபோக்களுக்கான  பாடசாலையை சீனா திறந்துள்ளது. கிழக்கு சீனாவின் ஜெஜியாங் (Zhejiang ) மாகாணத்தில் உள்ள ஹாங்சோவில் (Hangzhou), மனித உருவ ரோபோக்களுக்கான முதல் பாடசாலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் தொழில்நுட்பம், செவிலியம், கலைகள் மற்றும் விளையாட்டு என நான்கு தனித்துவமான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ரோபோக்களின் ஒட்டுமொத்தத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளி காட்சியில், பாடசாலை கழுத்துப்பட்டி (டை) அணிந்த ரோபோக்கள் , டேபிள் […]

ஐரோப்பா

போர்களத்தில் 05 இலட்சம் வீரர்களை இழந்த ரஷ்யா – பிரித்தானியா தகவல்

  • July 1, 2026
  • 0 Comments

2022 ஆம் ஆ்ண்டு போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 500000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக பிரித்தானியாவின் உளவு நிறுவனமான  GCHQ மதிப்பிட்டுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கு ட்ரோன் போர்முறை பெருகிய முறையில் பங்களித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உக்ரைனின் சில முன்னணிப் பகுதிகளில் உள்ள துருப்புக்களின் ஆயுட்காலம் 20 முதல் 35 நிமிடங்கள் மட்டுமே என்று ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த புள்ளிவிவரத்தை ஆக்ஸ்போர்டு வரலாற்றாசிரியர் பீட்டர் ஃபிராங்கோபன் மேற்கோள் காட்டியுள்ளார். பிற நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட  […]

ஐரோப்பா

பெல்ஜியத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீவிபத்து – ஐவர் உயிரிழப்பு

  • July 1, 2026
  • 0 Comments

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் (Antwerp) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், முதலுதவி குழுக்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளதாக தெரியவருகிறது. அதேநேரம் தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது இலங்கை செய்தி

‘எல்நினோ தாக்கம்: வடக்கு, கிழக்கில் வரலாறுகாணாத வெப்பம்’

  • July 1, 2026
  • 0 Comments

“எதிர்வரும் ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெப்பநிலை இயல்பை விட 2.8 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.” இவ்வாறு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும் வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல்நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் பரவலாக உணரப்பட்டு வருகின்றது. இதன்படி, எதிர்வரும் ஜூலை மாதப் பிற்பகுதியில் இலங்கையைச் சூழவுள்ள இந்து […]

ஐரோப்பா

ஐவரி கோஸ்டில் கடும் வெள்ளம் – 59 பேர் உயிரிழப்பு!

  • July 1, 2026
  • 0 Comments

ஐவரி கோஸ்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 59 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற  அமைச்சர்கள் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அரசாங்க செய்தித் தொடர்பாளர் அமடூ கூலிபாலி (Amadou Coulibaly) இவ்வாறு தெரிவித்தார்.

உலகம்

நியூயார்க்கில் கடும் வெப்ப எச்சரிக்கை : அவசர இலக்கம் அறிமுகம்

  • July 1, 2026
  • 0 Comments

நியூயார்க்கில் வெப்பநிலை 115 டிகிரி ஃபாரன்ஹீட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை மூன்று மாநிலங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெப்பநிலையுடன், புயல்களும் ஏற்படும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இப்பகுதியின் பெரும்பாலான இடங்களில் வெப்பக் குறியீட்டு மதிப்புகள் 115F வரை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உடல்நலக் குறைப்பாடுகள் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். முடிந்தவரை குளிரூட்டப்பட்ட இடங்களில் நேரத்தைச் செலவிடவும், தங்களுக்கு […]