அறிவியல் & தொழில்நுட்பம்

உலகில் முதல் முறையாக ரோபோக்களுக்கு பாடசாலை – சீனாவில் அசத்தல்

உலகில் முதல் முறையாக ரோபோக்களுக்கான  பாடசாலையை சீனா திறந்துள்ளது.

கிழக்கு சீனாவின் ஜெஜியாங் (Zhejiang ) மாகாணத்தில் உள்ள ஹாங்சோவில் (Hangzhou), மனித உருவ ரோபோக்களுக்கான முதல் பாடசாலை அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் தொழில்நுட்பம், செவிலியம், கலைகள் மற்றும் விளையாட்டு என நான்கு தனித்துவமான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன.

The first lesson will be how to actually grip a book (not confirmed)

இவை அனைத்தும் ரோபோக்களின் ஒட்டுமொத்தத் திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள காணொளி காட்சியில், பாடசாலை கழுத்துப்பட்டி (டை) அணிந்த ரோபோக்கள் , டேபிள் டென்னிஸ் விளையாடுவது, பியானோ பயிற்சி செய்வது மற்றும் கூடைப்பந்து விளையாடுவது போன்ற செயல்பாடுகளில் பங்கேற்பது காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன், நடைமுறைச் சவால்களைத் தீர்ப்பதும், பரந்த அளவிலான வேலைகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் என பாடசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்