பெல்ஜியத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் தீவிபத்து – ஐவர் உயிரிழப்பு
பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரில் (Antwerp) உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள், முதலுதவி குழுக்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதேநேரம் தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




