போர்களத்தில் 05 இலட்சம் வீரர்களை இழந்த ரஷ்யா – பிரித்தானியா தகவல்
2022 ஆம் ஆ்ண்டு போர் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 500000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக பிரித்தானியாவின் உளவு நிறுவனமான GCHQ மதிப்பிட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுக்கு ட்ரோன் போர்முறை பெருகிய முறையில் பங்களித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உக்ரைனின் சில முன்னணிப் பகுதிகளில் உள்ள துருப்புக்களின் ஆயுட்காலம் 20 முதல் 35 நிமிடங்கள் மட்டுமே என்று ரஷ்ய இராணுவ வலைப்பதிவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த புள்ளிவிவரத்தை ஆக்ஸ்போர்டு வரலாற்றாசிரியர் பீட்டர் ஃபிராங்கோபன் மேற்கோள் காட்டியுள்ளார்.
பிற நாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்ட துருப்புக்களை முன்னணிக்கு அனுப்பும் நுட்பத்தை ரஷ்யா கடைப்பிடித்திருந்தாலும் ட்ரோன்களின் ஆதிக்கம் அதிக ரஷ்ய வீரர்களின் இழப்புகளுக்கு வழிவகுத்துள்ளது.
மாதத்திற்கு சுமார் 30,000 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், ஒரு உக்ரைனிய வீரருக்கு 08 ரஷ்ய துருப்புகள் உயிரிழந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக உக்ரைன் தனது ஆளில்லா விமானத் திறன்களை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. 80 சதவீதத்திற்கும் அதிகமான ரஷ்ய இலக்குகள் உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் மூலம் அழிக்கப்படுவதாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.




