ஐரோப்பா

கோர தாண்டவம் ஆடிய ரஷ்யா : கீவ் மீது ஏவுகணை தாக்குதல்!

ரஷ்ய படைகள் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை கீவ் மீது  ஆளில்லா விமானம் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு ஒரு பெரிய அளவிலான ஒருங்கிணைந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளது.

இதனால் பல இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதுடன், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இந்தத் தாக்குதல் பல கட்டங்களாக நிகழக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்த நிலையில், குடியிருப்பளர்கள் பலர் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக இந்த தாக்குதல்களில் கீவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஷெவ்சென்கிவ்ஸ்கி (Shevchenkivskyi ) மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஹோட்டல் ஒன்று தீவிபத்துக்கு உள்ளாகியுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் உள்ள 03 வீடுகளும் தீவிபத்துக்கு உள்ளானதாக ஆளுனர் கிளிட்ச்கோ அறிவித்துள்ளார்.

மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பொன்று இடிந்து விழுந்ததாகவும், அதில் மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்