கடும் வறட்சி – அம்பாறையில் 09 நீர்பாசனக் குளங்களின் நீர்மட்டம் குறைவு
கடும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒன்பது பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டம் இன்று (06) நிலவரப்படி 21.5% ஆகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதான நீர்ப்பாசனக் குளங்களின் நீர்மட்டமும் 25.3% ஆகக் குறைந்துள்ளது. தொடர்ந்து நிலவும் கடும் வறட்சியானது, பல மாவட்டங்களில் மக்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து கடுமையாகப் பாதித்து வருகிறது. இத்தகைய பின்னணியில், பொலன்னறுவை மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் மழை பெய்து, வறட்சியிலிருந்து ஓரளவு […]








