உலகம்

வவுனியா தொடக்கம் அம்பாறை வரை – வெப்ப எச்சரிக்கை

  • August 16, 2026
  • 0 Comments

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  நாளைய தினம் (17) பகல் நேரத்தில் மேற்கூரிய மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே  சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதும், வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதும் சோர்வை ஏற்படுத்தும் என்றும், தொடர்ந்து […]

இலங்கை

பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூல் – வவுனியாவில் மருத்துவமனை ஒன்றுக்கு 500000 அபராதம்

  • July 29, 2026
  • 0 Comments

முழு இரத்த எண்ணிக்கை (FBC) பரிசோதனைக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாகக் கட்டணம் வசூலித்ததமைக்காக வவுனியாவில் உள்ள மருத்துவமனைக்கு 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகாரங்கள் ஆணையம் (CAA), தனது புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இதனை கண்டுப்பிடித்துள்ளது. அந்த மருத்துவமனை, இரத்தப் பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்ததை அவர்கள் கண்டறிந்தனர். விசாரணையைத் தொடர்ந்து, வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அந்தத் தனியார் மருத்துவமனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை […]

இலங்கை

ஓமந்தையில் கொலையில் முடிந்த மோதல் : ஒரு பிள்ளையின் தந்தை மரணம்!

  • June 7, 2026
  • 0 Comments

வவுனியா – ஓமந்தை பகுதியில் கோயிலின் கதவை அத்துமீறி திறக்க முயன்ற குழுவினருக்கும் மற்றொரு நபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் கொலையில் முடிந்துள்ளது. வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குளம் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் கதவை உடைத்து, ஆறு பேர் கொண்ட குழுவொன்று வலுக்கட்டாயமாக பூசை செய்வதற்கு முற்பட்டுள்ளது. இதற்கு அந்த இடத்தில் இருந்த பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்போது குறித்த பெண் மீது அக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப் பெண்ணின்  மகன் […]

இலங்கை செய்தி

வவுனியாவில் தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

  • April 26, 2026
  • 0 Comments

தந்தை செல்வநாயகத்தின் 49 ஆவது நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் அமைந்துள்ள அவரது சிலை முன்பாக இந்த நிகழ்வுது இடம்பெற்றிருந்தது. இதன்போது, அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அவர் தொடர்பான நினைவு பேருரைகளும் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வு வவுனியா தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பொது அமைப்பினர், பொதுமக்கள் மற்றும் கட்சி […]

இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கில் போராட்டம் முன்னெடுப்பு!

  • December 10, 2025
  • 0 Comments

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களை தாங்கியவாறு, நீதி கோரும் பதாதைகளுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கைதிகள் விடுதலை, பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் குரல் எழுப்பட்டது. அத்துடன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் […]