ஐரோப்பா

உக்ரைனுக்கு 1.67 பில்லியன் டொலர் நிதியுதவி – IMF ஆய்வு

உக்ரைனுக்கான கடன் திட்டத்தின் மீதான மறுஆய்வை சர்வதேச நாணய நிதியம் இன்று ஆரம்பித்துள்ளது.

இதன்மூலம் உக்ரைனுக்கு  , 1.67 பில்லியன் டொலர் அளவிலான நிதி உதவி கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

உக்ரைனின் முக்கிய சர்வதேச கடன் வழங்குநரான சர்வதேச நாணய நிதியத்துடனான ஒத்துழைப்பு, பிற பங்காளிகளிடமிருந்து நிதியைப் பெறுவதற்கும், பொருளாதார நிலைத்தன்மையைப் பேணுவதற்கும் மிக அவசியமானது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள உக்ரைனுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி பிரிசில்லா டோஃபானோ Priscilla Toffano, இந்தக் கலந்துரையாடல்கள் மேக்ரோ பொருளாதார மற்றும் நிதிசார் கொள்கைகள், அத்துடன் முக்கிய கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் குறித்து அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மறுஆய்வானது, உக்ரைனுக்காக சர்வதேச நாணய நிதியம் வகுத்துள்ள நான்கு ஆண்டு காலத் திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மதிப்பீடுகளை உள்ளடக்கியது.

இதன் மூலம் சுமார் 1.67 பில்லியன் டாலர் நிதியுதவி கிடைப்பதற்கான வழி பிறக்கக்கூடும்.

ரஷ்யாவுடனான மோதல் தொடர்ந்து நீடிக்கும் சூழலில், உக்ரைன் பாரிய அளவிலான நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்