போலந்தின் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பையும் பாதுகாப்போம் – நேட்டோ பொதுச் செயலாளர் உறுதி
“போலந்து நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பையும் நேட்டோ பாதுகாக்கும்” என்று நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
போலந்தின் வான்வெளியை ரஷ்யா ஊடுருவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வார்சாவில் இன்று உரையாற்றிய அவர், “போலந்து நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பரப்பையும் நேட்டோ பாதுகாக்கும் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
ஐரோப்பாவில் உள்ள நேட்டோ படைகளின் தலைவர், ஜெனரல் அலெக்சஸ் கிரின்கேவிச், பாதுகாப்பு மற்றும் தடுப்புத் திறன்களுக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு அச்சுறுத்தலையும் கண்டறியத் தேவையான அனைத்தையும் செய்வார்.
தேவைப்பட்டால் பொருத்தமான மாற்றங்களைச் செயல்படுத்துவார்” எனத் தெரிவித்துள்ளார்.




