பிரான்ஸ் முழுவதும் இன்றும் ஆர்ப்பாட்டம் – 70000 படையினர் குவிப்பு
வாழ்க்கைச் செலவு மற்றும் மாணவர் உரிமைகளுக்காக பிரான்ஸ் முழுவதும் இன்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும் கடந்தகாலங்களை போல் அல்லாமல் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் குறைவான மக்களே கலந்துகொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் 82,500 பேர் பங்கேற்றதாகவும், அவர்களில் 21,500 பேர் பாரிஸில் மட்டும் பங்கேற்றதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போராட்டங்கள் பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், கலவரங்களைத் தடுப்பதற்கும் பிரான்ஸ் முழுவதும் சுமார் 70,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் தெற்கு நகரமான மார்சேய் உட்பட, ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




