அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் நெதர்லாந்து – ஜனவரி முதல் அமுல்
அடிப்படை சம்பளத்தை உயர்த்தவுள்ளதாக நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சம்பள உயர்வானது வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதற்கமைய ஒருமணிநேர அடிப்படை சம்பளமானது €15.29 ஆக உயரவுள்ளது. இதன்படி மாதாந்திர தொகையானது €2,385.00 அதிகரிக்கும்.
மேலும், இளம் தொழிலாளர்களுக்குப் பொருந்தக்கூடிய அடிப்படை ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய
20 வயது € 13.38
19 வயது € 11.47
18 வயது € 9.56
17 வயது € 7.65
16 வயது € 6.12
15 வயது € 4.59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.




