விமானத்தை மோதச் செய்வதே இலக்கு – FlyDubai தாக்குதல்தாரி வாக்குமூலம்
இஸ்ரேல் நோக்கிச் சென்ற ‘ஃப்ளை-துபாய்’ (FlyDubai) விமானத்தின் விமானியை தாக்கிய துணை விமானி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் 29 வயதான ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல் ஹம்மாமி Hamam Al Hammami, என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘ஓமன் ஏர்’ (Oman Air) நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு விமானப் பணிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை குறித்த விவரங்களை அறிந்த பல அதிகாரிகள் ஏபிசி செய்தி சேவையிடம் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். […]



