நேபாளத்தில் புதி கண்டகி நதிப் படுக்கையில் வெள்ளம் – 10 பேர் மாயம்
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள புதி கண்டகி (Budhi Gandaki) நதிப் படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெள்ளம் வாகனங்கள் செல்லும் இரண்டு பாலங்கள் மற்றும் நான்கு தொங்கு பாலங்கள் உட்பட மொத்தம் ஆறு பாலங்களை அடித்துச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து ஏறி இறங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நேபாள ராணுவப் படைப்பிரிவு ஒன்று வான் மற்றும் தரை வழியாக அனுப்பப்பட்டுள்ளதாக பிரதமர் பாலன் ஷா (Balen Shah) தெரிவித்துள்ளார்.




