செய்தி

ஞானசார தேரரின் காவி உடையை அரசியல் ஆயுதமாக்கும் மஹிந்த அணி

“புலி டயஸ்போராக்கள் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

“புலி டயஸ்போராக்கள் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை திருப்திப்படுத்துவதற்காகவே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்:

“வீட்டிலுள்ள பெண்களைப் பிடிக்கும் நிலைக்கு அரசாங்கம் வரும் என நினைக்கவில்லை. புலி டயஸ்போராக்கள் மற்றும் பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தவே ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவைக் கைது செய்தால் என்ன நடக்கும் என்பது தெரியும்; அதனால்தான் ஷிரந்தியையாவது கைது செய்யுமாறு கோரி, அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.

அதேவேளை, சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு அந்நாட்டு மன்னரிடம் கோரிக்கை விடுப்பதற்கு முன்னர், பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இலங்கையில் மன்னிப்பு வழங்க வேண்டும்.

ஞானசார தேரர் பாலியல் குற்றங்களில் ஈடுபடவில்லை, கொள்ளையடிக்கவில்லை” என்றும் மனோஜ் கமகே சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி