இலங்கை முக்கிய செய்திகள்

நாடு முழுவதும் சீரற்ற வானிலையால் 5,747 பேர் பாதிப்பு – 08 பேர் உயிரிழப்பு

இலங்கை முழுவதும் நிலவும் மழையுடன் கூடிய வானிலையால்  5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையின்படி, மோசமான வானிலை நிலைமைகள் 166 பிரதேச செயலகப் பிரிவுகளில் (DSDs) 1,594 குடும்பங்களைப் பாதித்துள்ளன.

அதேநேரம் மோசமான வானிலை காரணமாக எட்டு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான அனர்த்தங்களால் நான்கு வீடுகள் முழுமையாகவும், 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

அதேவேளையில், 12 மாவட்டங்களில் உள்ள 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 47,583 குடும்பங்களைச் சேர்ந்த 156,756 பேர் வறட்சி நிலைமையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 32 பிரதேச செயலகப் பிரிவுகளில் 28 பிரிவுகளில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேற்கொண்டுள்ளது.

இதுவரை 38,547 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 128,977 பேருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்