ஐரோப்பா

எடின்பரோவின் வரலாற்று சிறப்பு மிக்கக் கட்டிடத்தில் தீவிபத்து

எடின்பரோவின் பிரின்சஸ் தெருவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெபென்ஹாம்ஸ் (Debenhams)  கட்டிடத்தில் இன்று பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2:52 மணிக்கு தீவிபத்து தொடர்பில் அவசர சேவையினர் அழைக்கப்பட்டனர்.

காலை 6:45 மணிக்குள் ஏழு தீயணைப்பு வாகனங்களும் மூன்று சிறப்பு உபகரணங்களும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தன.

இந்நிலையில் காலை 08.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தீ முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன் தீவிபத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான விபத்துகள் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் தீவிபத்துக்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்