ஐரோப்பா

ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள புடினுக்கு அழைப்பு இல்லை

பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு  நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைக்கப்பட மாட்டார் என்று  பிரதமர் ஆண்டி பர்னம் தெரிவித்துள்ளார்.

தி எகனாமிஸ்ட்’ நாளிதழ் இன்று வெளியிட்ட செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பர்னமின் அலுவலகம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்று ரொய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவைத் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயற்சித்த போதிலும், ஜி20 அமைப்பில் ரஷ்யா உறுப்பினராகத் தொடர்கிறது.

பாரம்பரியமாக, மாநாட்டை நடத்தும் நாடுகளின் தலைவர்கள், அதன் வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு அமைப்பின் அனைத்து உறுப்பினர்களையும் அழைப்பது வழக்கம்.

அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர ஜி20 உச்சி மாநாடு, நவம்பர் மாதம் மென்செஸ்டர் நகரில் நடைபெறும்.

ஆனால் இந்த மாநாட்டிற்கு புட்டினை அழைக்கப்போவதில்லை என பர்னம் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்