ஜோர்தானில் இலங்கை தூதரகத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகாரி சுட்டுக்கொலை
ஜோர்தான் தலைநகரான அம்மாமில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் ஜோர்டான் நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அந்நாட்டு அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் சுமார் 12.20 மணியளவில், இடம்பெற்றுள்ளது.
கூர்மையான ஆயுதத்துடன் வந்த நபர் ஒருவர், தூதரகக் கட்டிடத்திற்கு அருகில் பணியில் இருந்த பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்ட அதிகாரி, கோர்ப்பரல் ஜவாத் அலி கலஃப் அல்-சலைதா (Corporal Jawad Ali Khalaf Al-Salaita) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதல்தாரி சம்பவ இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்கும் சக பணியாளர்களுக்கும் இலங்கைத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.




