பொழுதுபோக்கு

சாதாரணமாக பிறந்து உச்சம் தொட்ட மனிதனின் வாழ்க்கை சினிமா ஆகிறது….

சமீப காலமாக பயோபிக் எனப்படும் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், இசை, நடன கலைஞர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமா ஆகிறது.

அந்த வரிசையில் உலக பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. ‘டெஸ்லா’ நிறுவனத்தின் அதிபரான இவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதில் பல மாற்றங்களை செய்ததன் மூலம் உலகம் முழுக்க பிரபலமானார்.

தென் ஆப்பிரிக்காவில் சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க் வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சினைகள், அவர் செல்வந்தராக உயர்ந்தது, இன்னும் சொல்லப்படாத பல விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வாழ்க்கை படத்தை பிளாக் ஸ்வான், பை, தி வேல் போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய டாரென் ஆர் நோப்ஸ்கி இயக்குகிறார்.

ஏ24 என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தனது வாழ்க்கையை படமாக்க எலான் மஸ்க் ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அவர் கேரக்டரில் நடிப்பவரின் தேர்வு நடந்து வருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

(Visited 2 times, 1 visits today)

Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page