ஐரோப்பா

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் – 12 பிரித்தானியர்கள் மாயம்

  • August 26, 2026
  • 0 Comments

நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான எல்லையோர கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல்போயுள்ள 384 சுற்றுலாப் பயணிகளில் 12 பிரித்தானியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன வெளிநாட்டுப் பயணிகளில் 291 பேர் இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று நேபாள அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதேபோல் நீர்மின் நிலையத்தில் பணிபுரிந்த 08 தொழிலாளர்களும் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செய்தி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கிற்கான காரணம் வெளியானது

ஐரோப்பா

இத்தாலி நோக்கிச் சென்ற புலம்பெயர்ந்தோர் படகு விபத்து – 13 பேர் மாயம்

  • August 22, 2026
  • 0 Comments

இத்தாலியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் படகு ஒன்று துனிசியக் கடற்கரைக்கு அப்பால் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தத 13 துனியர்கள் காணாமல்போயுள்ளதுடன், இருவர் மட்டுமே மீட்கப்பட்டதாக புலம்பெயர்ந்தோர் உரிமைக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். குறித்த  துயரச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது. வியாழக்கிழமை அதிகாலையில் அந்தப் படகு புறப்பட்டது என்று துனிசிய மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் முஸ்தபா அப்தெல்கெபிர் Mostafa Abdelkebir குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் உயிர் பிழைத்தவர்களில் இரண்டாவது நபரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். […]

இலங்கை

ஹட்டனில் மண்ணில் புதையுண்ட நான்கு பேரின் சடலங்கள் மீட்பு

  • August 3, 2026
  • 0 Comments

ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் மாயமான மேலும் மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஹட்டனில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்து விபத்து – பெண் பலி, மூவர் மாயம் ஹட்டன், பொல்பிட்டியவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்தத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது; அவசரகாலக் குழுக்கள் […]

உலகம்

ஐரோப்பா நோக்கிய ஆபத்தான பயணங்கள் அதிகரிப்பு -144 அகதிகள் மாயமானதாக அறிவிப்பு

  • July 21, 2026
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஐரோப்பாவின் அட்லாண்டிக் தீவுகளுக்குச் செல்லும் பாதையில், மௌரித்தானியாவின் (Mauritania)  கடற்கரைக்கு அப்பால் தொடர்ச்சியாக கப்பல்கள் அல்லது படகுகள் விபத்துக்குள்ளாகுவது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 144 அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் இறந்ததாகவோ அல்லது காணாமல் போனதாகவோ அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் முகமை (UNHCR), ஜூலை 14 முதல் 18 வரையான காலப்பகுதியில் இந்த விபத்துகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த காலப்பகுதியில் மூன்று மீட்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டதாகவும், இதன் ஊடாக 387 பேர் […]

இலங்கை

2.5 மில்லியன் டொலர் மாயம் : 200 டொலர்களை மட்டும் மீட்க நடவடிக்கை!

  • May 25, 2026
  • 0 Comments

திறைசேரியில் இருந்து குற்றவாளிகளின் கைகளுக்கு கிடைக்கப்பெற்ற 2.5 மில்லியன் டொலரில் இருந்து வெறும் 200 டொலர்களே மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைபர் மோசடியால் மாயமாகிய பணத்தை மீட்க இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவிடம் உதவி கோரியுள்ளனர். இதற்கமைய அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி,  திருடப்பட்ட நிதியின் ஒரு பகுதி அமெரிக்காவின் டெலவெயர் மாகாணத்தில் உள்ள ஒரு வங்கி கணக்கிற்கும், மீதமுள்ள நிதி மற்றொரு மாகாணத்தில் உள்ள வங்கி கணக்கிற்கும் மாற்றப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், டெலவெயர் மாகாண வங்கி கணக்கு […]

உலகம்

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட படகு விபத்து – 14 பேர் மாயம்!!

  • May 13, 2026
  • 0 Comments

இந்தோனேசிய புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக நம்பப்படும் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் சுமார் 14 பேர் மாயமாகியுள்ளதாக மலேசிய கடல்சார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேராக்  (Perak ) மாநிலத்தில் உள்ள பாங்கோர் (Pangkor) தீவுக்கு அருகே நேற்று இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஏழு பெண்கள் உட்பட 23 இந்தோனேசியர்கள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் இணைந்து மீட்டதாக  மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அவர்கள் மே 9 அன்று இந்தோனேசியாவின் கிசரானில் (Kisaran) இருந்து புறப்பட்டது […]

இலங்கை முக்கிய செய்திகள்

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயம்!

  • April 24, 2026
  • 0 Comments

இலங்கையின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாட்டின் திறைசேரியால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணமே இவ்வாறு களவாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் நம்பகமான தரப்பாக நடித்து, தவறான தகவல்களை அளித்து குறித்த பணத்தை  கொள்ளையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் பணத்தை மீட்க வேண்டியிருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. மக்கள் மத்தியில்  […]

இலங்கை

இலங்கை – வீட்டை விட்டு வெளியேறிய இரு சிறுவர்கள் மாயம்!

  • October 9, 2025
  • 0 Comments

கண்டி, தென்னகும்புர பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றை தினம் (08.10) அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாயார் இந்திரமணி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். தென்னகும்புரவில் மகாவலி ஆற்றின் பக்கம் இரண்டு சிறுவர்களும் செல்வதைக் கண்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.