Consent Preferences
ஐரோப்பா

பல்கேரியாவில் சோகம் – பலவாகனங்கள் மோதி விபத்து, 11 பேர் பலி

  • November 10, 2026
  • 0 Comments

பல்கேரியாவில் பல வாகனங்கள் ஒன்றோடு  ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு வழித்தடங்களில் வாகனங்கள் மோதிக்கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தலைநகர் சோஃபியாவையும் கிழக்கு நகரமான புர்காஸையும் இணைக்கும் இந்த முக்கிய நெடுஞ்சாலையில், விபத்து நிகழந்துள்ளது. பனிமூட்டமான வானிலையே விபத்து ஏற்பட காரணம் எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா

பல்கேரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

  • October 25, 2026
  • 0 Comments

பல்கேரியாவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிக்கு நிறைவு பெறும். மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபர் இலியானா அயோடோவா (61) Iliana Iotova, மற்றும் முன்னாள் இடைக்காலப் பிரதமர் ஆண்ட்ரி கியூரோவ் (50) Andrey Gyurov ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இயோடோவா வெற்றி பெற்றால், பல்கேரியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் அதிபர் என்ற பெருமையைப் பெறுவார். அந்நாட்டில் ஜனாதிபதி பதவி பெரும்பாலும் […]

ஐரோப்பா

பல்கேரியாவில் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் – 11 மாலுமிகள் மாயம்

  • October 13, 2026
  • 0 Comments

பல்கேரியக் கடற்கரைக்கு அப்பால் இன்று ட்ரோன் தாக்குதலுக்கு இலக்காகி கப்பல் ஒன்று நீரிழ் மூழ்கியுள்ளது. இதில் குறித்த கப்பலில் பணியாற்றிய 11 மாலுமிகள் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கடற்பகுதியில் இடம்பெறும் இரண்டாவது சம்பவம் இது எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பல்கேரிய அரசாங்கம் ரஷ்ய தூதரை வரவழைத்து விளக்கம் கோரியுள்ளது. இத்தாக்குதல்களை ரஷ்யாதான் நடத்தியது என்று பல்கேரியா நேரடியாகக் குற்றம் சாட்டவில்லை என்றாலும், இதன் விளைவு “ரஷ்யக் கூட்டமைப்பிற்குச் சாதகமாக உள்ளது” என்று பிரதமர் ரூமென் ராதேவ் […]