ஐரோப்பா

ஆப்கானிஸ்தானியர்களை வெளியேற்ற ஜேர்மன் அரசாங்கம் எடுத்த முடிவுக்கு நீதிமன்றம் முட்டுக்கட்டை

  • July 24, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நாடு கடத்த ஜேர்மனி அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் அதற்கு தடை விதித்து அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ஆப்கானியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட மீள்குடியேற்ற இடங்களின் ஒரு பெரும் பகுதியை அரசாங்கம் சாதாரணமாக ரத்து செய்ய முடியாது என்றும், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, முந்தைய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட “மனித உரிமைகள் பட்டியலின்” கீழ், 2021-ல் ஜெர்மனியில் அனுமதிக்கப்படுவதற்காகத் […]

ஐரோப்பா

நீதி தவறிய நீதிமன்றம் : 36 ஆண்டுகள் சட்டப் போராட்டம்!! இழப்பீடு வழங்க உத்தரவு

  • June 20, 2026
  • 0 Comments

ஸ்பெயினில்  தான் செய்யாத குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு 2.5 மில்லியன் யூரோக்கள் (2.87 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991-ல் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்த, மொராக்கோவைச் சேர்ந்த அகமது டொம்மூஹி, என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கட்டலோனியாவில் நடந்த இரண்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஒரு கொள்ளை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். […]

இலங்கை

கோட்டாவின் ரிட் மனு தொடர்பில் நாளை விசாரணை

  • June 17, 2026
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவை நாளைய  (18) தினம் விசாரிக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி,  ரொஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வின் முன்பாக இந்த மனு இன்று விசாரிக்கு  எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மைகளை உறுதி செய்வதற்காக இந்த மனுவை நாளை விசாரிக்குமாறு […]

ஐரோப்பா

முடிந்துபோன வாழ்க்கைக்கு 24 ஆண்டுகளாக போராட்டம்!! 6.6 மில்லியன் பவுண்டுகளை வென்ற பெண்!

  • June 5, 2026
  • 0 Comments

இருபது ஆண்டுகளுக்கு முன்பே தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தோன்றிய  விவாகரத்து வழக்கொன்றில் இந்திய பெண் ஒருவர் 6.6 மில்லியன் பவுண்டுகளை ஜீவனாம்சமாக பெற்றுள்ளார். இந்த விசித்திரமான வழக்கு பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவை தாயகமாகக் கொண்ட வர்ஷா கோஹில் என்ற பெண் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி அவரிடம் இருந்து விவகாரத்து கோரியுள்ளார். 2002-ல் வர்ஷா கோஹில், தனது கணவர் பத்ரேஷ் கோஹிலை பிரிவதற்கு  விவாகரத்து வழக்கை தாக்கல் செய்தார். இதற்கமைய கணவரான பத்ரேஷ்  அவருக்கு […]

இலங்கை

பிணை முறி மோசடி விவகாரம் : பிரதிவாதிகளுக்கு சாதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இரத்து!

  • June 1, 2026
  • 0 Comments

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்த செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது. அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு […]

ஐரோப்பா

யூதர்கள் மீதான தாக்குதல் – நீதிமன்றத்தில் முன்னிலையாகும் தாக்குதல்தாரி!

  • May 1, 2026
  • 0 Comments

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இடம்பெற்ற கத்துக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரி மீது  கொலைகுற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி 45 வயதான ஈசா சுலைமான் என்ற தாக்குதல்தாரி மீது இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் மற்றும் கூர்மையான ஆயுதத்தை வைத்திருந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட சுலைமான், சவுத்வார்க்கில் நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார். மேலும் இன்றைய தினம் அவர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் (Westminster […]

இலங்கை

நீதிமன்றத்தில் முன்னிலையாகும் அர்ச்சுனா எம்.பி!

  • April 29, 2026
  • 0 Comments

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். யாழில் காணி உரிமை தொடர்பாக பெண் ஒருவரை துப்பாக்கியை காட்டிய மிரட்டிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர்,  மல்லகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில்,  இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்புடைய செய்தி  நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு விளக்கமறியல்      

இலங்கை செய்தி

அர்ச்சுனாவுடன் முரண்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல் 

  • April 26, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது. பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் காணி பிணக்கு நிலவி வரும் நிலையில் , நேற்றைய தினம் சனிக்கிழமை குறித்த காணிக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மற்றைய தரப்பினரும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியை காட்டி […]

இலங்கை

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

  • April 23, 2026
  • 0 Comments

இந்தியாவின் ‘கிரிஷ்’நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை மே மாதம் 29 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட முன்னிலையில் இந்த வழக்கு இன்று (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக எனக் கூறி, இந்திய கிரிஷ் நிறுவனத்திடம் இருந்து 70 மில்லியன் ரூபாயைப் […]