வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கோட்டாபய கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்மீது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் ருத்துவத் தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. தற்போது ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை தற்காலிகமாகத் தளர்த்துமாறு இந்த விண்ணப்பத்தின் மூலம் கோரப்பட்டுள்ளது.



