ஐரோப்பா

UKவில் சோகத்தில் முடிந்த சேசிங் (Chasing) – பலர் உயிரிழப்பு

பிரித்தானியாவில் பொலிஸ் வாகனமொன்றுடன்  வோக்ஸ்வாகன் பாஸாட் கார் Volkswagen Passat மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டீசைட் Teesside பகுதியில் உள்ள A66 நெடுஞ்சாலையில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

குறித்த வாகனத்தை பொலிஸாரின் வாகனம் துரத்திச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காவல் துறை நடத்தைக்கான சுதந்திர அலுவலகம் (IOPC), இந்த கோர விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளவும் அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்