தீக்கிரையான பேருந்து – நொடியில் உயிர்தப்பிய ஓட்டுநர்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலைக்கு பயணிக்க தயாராக இருந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த தீவிபத்து இன்று காலை இடம்பெற்றது.
சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் ஓட்டுநரும் உதவியாளரும் மட்டுமே இருந்தனர், அவர்கள் இருவரும் காயமின்றி தப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வரவிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரச் சென்று கொண்டிருந்தபோது இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவம் குறித்து ஹபரண பொலிஸ் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




