கருத்து & பகுப்பாய்வு

காலநிலை மாற்றத்தால் கடலோர பகுதிகளை ஆக்கிரமிக்கும் பல்லுயிர்கள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் கடல் மட்ட உயர்வால் கடலோர பகுதிகளிலும், ஆக்கிரமிப்பு கடல்வாழ் உயிரினங்கள் பரவ உதவக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது பல்லுயிர் பெருக்கத்திற்கும் சில பொருளாதார நடவடிக்கைகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

‘நேச்சர் எக்காலஜி & எவல்யூஷன்’ Nature Ecology & Evolution இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

, காலநிலை மற்றும் பல்லுயிர் பெருக்க நெருக்கடிகளுக்கு இடையிலான தொடர்புகளை இந்த ஆய்வுக் கட்டுரை வெளிப்படுத்துகிறது.

புவி வெப்பமயமாதல் சூழல் அமைப்புகளை மாற்றி, அயல் இனங்கள் செழித்து வளர புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செயற்திட்டமானது இதுவரை இந்த உயிரினங்களால் பாதிக்கப்படாத சூழல் அமைப்புகளையும் மனித நடவடிக்கைகளையும் பாதிக்கக்கூடும்,” என்று கட்டுரை ஆசிரியரான ஸுவான் லியு Xuan Liu குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை காலநிலை மாற்றம், வெப்ப விரிவாக்கத்தின் மூலம் கடல் மட்டத்தை உயர்த்துகிறது – அதாவது கடல் நீர் வெப்பமடையும்போது அதன் கன அளவு அதிகரிக்கிறது – மேலும் பனியாறுகள் மற்றும் பனிப்படலங்கள் உருகுவதாலும் கடல் மட்டம் உயர்கிறது.

அதன் காரணமாக, நூற்றாண்டின் நடுப்பகுதியில் சுமார் 360,000 சதுர கி.மீ. கடலோரப் பகுதி வெள்ளத்தில் மூழ்கும், இது நூற்றாண்டின் இறுதியில் 550,000 சதுர கி.மீ. ஆக உயரும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை