காலி – ரத்கமவில் துப்பாக்கிச்சூடு : இளைஞர் ஒருவர் படுகாயம்
காலி – ரத்கம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (28) இரவு 8.15 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவரை இலக்கு வைத்து இந்த துப்பாகிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலிது பிரசன என்ற 25 வயது இளைஞர் மீதே மேற்படி தாக்குல் நடத்தப்பட்டுள்ளது.
டி56 ரக துப்பாக்கியைக் கொண்டு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.




