உலகம்

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒப்புதல் : தேர்தல் பயத்தில் நெதன்யாகு!

Netanyahu to meet Greek and Cypriot leaders in Jerusalem

இஸ்ரேலின் நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இதனால் அடுத்ததாக பொதுத் தேர்தல் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர்  பெஞ்சமின் நெதன்யாகு தோல்வியடைவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கான பூர்வாங்க வாக்கெடுப்பு ஏறக்குறைய ஒருமனதாக நிறைவேறியுள்ள நிலையில், ஒப்புதல் கிடைக்க இன்னும் சில வாரங்கள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதியில் தேர்தல் நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 7 தாக்குதல், தொடரும் மோதல்கள்,  இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அந்தஸ்தில் அவற்றின் தாக்கம் ஆகியவற்றால் பொதுமக்களின் மத்தியில் நடப்பு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை குறைந்துள்ள நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்