சீரற்ற வானிலை – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அரச பேருந்து
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக அரச பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அம்பகமுவ பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கினிகத்தெனவிலிருந்து நாவலப்பிட்டிய நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தொன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. பின்னர் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் உள்ளிட்ட பிரதேசவாசிகள் இணைந்து பேருந்தை மீட்டுள்ளனர். இதில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை நாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலையின் காரணமாக இதுவரை 06 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













