இலங்கை செய்தி

இலங்கை – பெலாரஸ்: வான் வழி போக்குவரத்து குறித்து ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் மேற்படி ஒப்பந்தங்களை பரிமாற்றிக்கொண்டனர்.

குறித்த ராஜதந்திர நகர்வானது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வான்வழிப் போக்குவரத்து வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பொருளாதார மற்றும் பயணப் பரிமாற்றங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பெலாரஸ் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தரப்பினருடனும் விஜித ஹேரத் பேச்சு நடத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!